காணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு!

கனடாவில் தன்னார்வக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு கனடா ஒட்டாவா, நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான 424 கிலோ மீற்றர் தூர, நெடு நடைப்பயணம் எமது உறவுகளான;

  • சகோதரன் டேவிட் தாமஸ்
  • சகோதரன் விஜிதரன் வரதராஜன்
  • சகோதரன் மகாஜெயம் மகாலிங்கம்
  • சகோதரன் யோகேந்திரன் வைசீகமாகபதி

ஆகியோரால் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணத்தினை மேலும் வலுப்பெற்று வெற்றிபெற, கனடாவாழ் தமிழர்களின் பூரண ஓத்துழைப்பினையும், ஆதரவையும் வழங்குவது வரலாற்றுக் கடமையாகும்.

இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைய உலகத் தமிழர் பேரவை இந்த காணொளியை தமிழர்களுக்குள் எழுச்சியை ஊக்குவிக்கும் வகையில் வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளது.

நன்றி.

உலகத் தமிழர் பேரவை

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: