மத்திய அரசு வரும் 75 ஆவது குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் சுதந்திர வரலாற்று தலைவர்களின் வாகன ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து உலகத் தமிழர் பேரவையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 25ஆம் தேதி காலை 10 மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் வரலாற்று தலைவர்களின் படங்களை அலங்கரித்த வாகன ஊர்தியில் ஐயா வஉசி படமும், வீரமங்கை வேலுநாச்சியார் படமும், மகாகவி பாரதியார் படம் இடம் பெறுமாறு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, வ உ சி அவர்களின் தியாகத்தை அறிந்து கொள்ளாமல், அவர் ஒரு வியாபாரி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஐயா வஉசி அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், மரியாதையற்று நடந்து கொண்ட மத்திய அரசின் நிபுணர் குழுவை உலக தமிழர் பேரவை கடுமையாக கண்டிக்கிறது. வரலாறு தெரியாத இப்படிப்பட்ட நிபுணர் குழுவை உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.
அடுத்து, வரும் குடியரசு நாளன்று தமிழக வரலாற்று தலைவர்களின் அலங்கரித்த படங்களை ஏந்திய வாகன ஊர்தி இடம் பெறாதயொட்டி, விளக்கமான ஒரு கடிதம் எல்லா மாநிலங்களுக்கும் அரசு தலைமை அமைச்சர்களுக்கும், அவரவர் மொழிகளில் நமது கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களது ஆதரவையும் நாம் கோருகிறோம்.
வரும் 25ம் தேதியே சமூக ஊடகங்களில் இது பற்றிய பதிவுகளை அதிகம் பகிர்ந்து நமது கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென்று உலகத் தமிழர்களையும், அமைதியை விரும்பும் மக்களையும் இதில் ஈடுப்பட்டு கண்டனங்களை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சென்னையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும், அனைத்து இயக்கங்களையும், அனைத்து அமைப்புகளையும் சிறப்பாக பங்கெடுத்து நமது எதிர்ப்பை மத்திய அரசுக்கு காட்டும் வகையில் ஒன்று கூடுவோம்.
வாருங்கள் தமிழர்களே, நமது உரிமையை மீட்டெடுப்போம்!
அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
—————————
முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கியவர்கள்:
1. வ. உ. சி. சேவாதளம் பொது செயலாளர் T. விஜயகுமார்
2. வ. உ. சி. சேவாதளம் பொருளாளர் K. பிச்சையா பிள்ளை
3. உலகத் தமிழர் பேரவைத் தலைவர் அக்னி சுப்பிரமணியம்
4. மனித நேய சேலம் க. ராஜாராம் அறக்கட்டளைத் தலைவர் ராஜாராம் ராஜசேகர்
5. வேளாளர் வரலாற்று மையத் தலைவர் M. R. M. முத்து
6. V. K. V. டிரஸ்ட் நிறுவனர் மோகன் பாபு
7. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் பெயர்த்தி திருமதி வெற்றி செல்வி
8. சைவ வேளாளர் பேரவை நிறுவனர் திரு. மீனாட்சி சுந்தரம்
9. வ.உ.சி. சேவாதளத்தின் தலைவர் திரு. பி.என்.சுந்தரம் பிள்ளை
மற்றும் வழக்கறிஞர் செங்குட்டுவன், வழக்கறிஞர் அரங்க இளங்கோவன் இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாததால் தொலைபேசி மூலம் தங்கள் கருத்துக்களை வழங்கினார்கள்.
மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
முன்னதாக Ln. T. விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த்த அக்னி சுப்ரமணியம் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.