ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்த ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிரிட்டிஷ் படையை குண்டுகளை வீசி கதிகங்கடித்த நினைவு தினம் இன்று!!!

இந்தியா நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஆதிக்க படைகளை முதலாம் உலக போரில், ஜெர்மனி படையின் சார்பாக அன்றைய ஹிட்லரின் நண்பரும் தளபதியாய் விளங்கிய சிங்கம் ஐயா திரு. செண்பகராமன் பிள்ளை அவர்கள் ஆங்கிலேயப் படைக்கு சவால் விடும் வகையில் எம்டன் போர்க்கப்பலிலிருந்து 22.09.1914 அன்று குண்டுகளை வீசினார். அதில் ஒன்று சென்னை தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டையிலும் மற்றொன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும் விழுந்தது. இதில் கோட்டையில் விழுந்தது குண்டு, வெடிக்காமல் போகவே, நீதிமன்ற வளாகத்தில் விழுந்த குண்டு வெடித்து சுற்றுச்சுவர் பெரும் சேதமடைந்தது. இதை அப்போதய ஆங்கிலேயர்கள் கல்வெட்டாய் பொரித்து, குண்டு விழுந்த அதே இடத்தில வைத்தனர். (இந்த கல்வெட்டில், ஐயா திரு. செண்பகராமன் பிள்ளையின் பெயர் பொறிக்கப்படவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றுவரை இந்திய அரசோ, தமிழக அரசோ அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரியது.)

இன்று அந்த நிகழ்ச்சியினுடைய 107 ஆவது நினைவு தினத்தையொட்டி குண்டு வீசப்பட்ட அதே இடத்தில் கல்வெட்டின் அருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவர் திருவுருவ படம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவருடைய பேரனான திரு.சேது சேஷன் அவர்களும், வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு.பால் கனகராஜ், திரு. ராஜேந்திரன், திரு. செங்குட்டுவன் மற்றும் வழக்குரைஞர் சங்க நிருவாகிகளும், திருமதி ஹேமா கோபாலன், மற்றும் உலக தமிழர் பேரவை சார்பாக திரு.அக்னி சுப்ரமணியம் அவர்களும் பொறுப்பாளர் திரு.சேது ராமலிங்கம் அவர்களும், அலுவலக பொறுப்பாளர் திரு.கெளதம் அவர்களும் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் உடன் இருந்து விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக உலகத்தமிழர் பேரவை தலைவர் திரு.அக்னி சுப்ரமணியம் நன்றி உரையாற்றினார்.

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>