இந்த முஸ்லிம் பேச்சாளர் புலிகளின் வரலாற்றை தவறாக சித்தரிக்கிறார் – ஏன்?

இந்த முஸ்லிம் பேச்சாளர் புலிகளின் வரலாற்றை தவறாக சித்தரிக்கிறார் – ஏன்?
இந்தாள் யார்? அடையாளம் சொல்ல முடியுமா? இந்தாள் சொன்ன வரலாற்றுச் செய்திகள் அத்தனையும் தவறு.

இந்தாள் யார்? அடையாளம் சொல்ல முடியுமா? இந்தாள் சொன்ன வரலாற்றுச் செய்திகள் அத்தனையும் தவறு.

1. 1928-ல் தமிழர்களோடு இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சனை இருந்துள்ளது. பின்னர் விடுதலைப் புலிகள் காலத்தில் முஸ்லிம்கள், சிங்கள அரசுக்கு காட்டிக் கொடுப்பு நடந்ததால், யாழ்ப்பாணம் விட்டு வெளியேற புலிகளால் உத்தரவிடப்பட்டனர்.

பல காலங்களில், சிங்கள காடையர்களாலேயே இலங்கை முஸ்லிம்கள் மீதான கலவரம் நடைபெற்றதுண்டு.

2. பிரபாகரன் மதத்தால், கிருத்துவர் என்பதும் தவறான தகவல். அவர் மதங்களை கடந்திருந்தாலும், அவரது குடும்பம் சைவர்களாகவே இருந்துள்ளனர். அவரது தாத்தாவால் கட்டப்பட்ட கோவில், அவரருக்கு பின்னர் பிரபாகரனின் தந்தையால் பராமரிக்கப்பட்டே வந்துள்ளது. இன்றும் அந்த கோவில் யாழ்பாணத்தில் வல்வெட்டித்துறையில் உள்ளது. நானே அந்த கோவிலுக்குச் சென்று வந்துள்ளேன்.

3. ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வ குடிகள் என்பதையும் கூட அறியாமல், தோட்டத் தொழிலுக்கு சென்றவர்கள் என்ற தவறான வரலாற்றை பச்சை பொய் கூறுகிறார்.

4. தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக சிங்களவர்களால் நடத்தப்பட்டதாலேயே, தனி நாடு என்ற கோரிக்கைக்கு வித்திட்டவர் மிதவாதியான தந்தை செல்வா அவர்கள் தான். வட்டுகோட்டையில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில்தான் இந்த கோரிக்கையை அவர் பேசினார். அந்த வட்டுக் கோட்டை மாநாட்டிற்கு பிரபாகரன் சென்றதாக ஒரு தகவலும் உண்டு.

இந்தாள், புலிகள் தான் தனி நாடு பிரித்து கேட்டதாக சொல்வது தவறான வரலாற்றுச் செய்தி.

5. தமிழினப் படுகொலைகள் என்ற நம்மாள் வெளியிடப்பட்ட நூலில்,  சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட 160 மேற்பட்ட படுகொலைகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்தாள் சொல்வது போல, முஸ்லிகள் மீது புலிகள் நடத்திய படுகொலைகளை பட்டியலிட முடியுமா? காத்தான் குடி படுகொலை என்பது, சிங்களவர்களின் கைக்கூலிகளால் செய்யப்பட்ட படுகொலை என்பதை மறைப்பதேன்.

6. தமிழகத்தில் சென்னை விமான நிலையத்தில் குணடு வைத்து வெடித்தவர் இன்னும் ஐரோப்பிய நாடு ஒன்றில் உயிரோடு இருக்கிறார். அவர் விடுதலைப் புலிகள் இயக்கமன்று என்பதை அவரே சொல்லியுள்ளார்.

இராசிவ் காந்தி படுகொலை என்பதையும் விடுதலைப்புலிகள் இயக்கம் மறுத்தே வந்ததுள்ளது.

இவர் சொன்ன அனைத்து தவறான செய்திகளுக்கும் நாம் பதில் சொல்லியுள்ளோம். இந்த பேச்சாளரின் எண் இருந்தால் கொடுக்கவும். நேரிடையாக இதுபற்றி சொல்லவும் நினைக்கிறோம்.

அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: