
உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலகம்”! புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம்!
உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலகம்” இதழை புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
காலஞ்சென்ற தமிழ் செயற்பாட்டாளரும், உலகத் தமிழர் பேரவை – யை நிறுவியவருமான முனைவர் இரா. ஜனார்த்தனம் அவர்களுக்கு பின்னர் அவ்வமைப்பை தொடர்ந்து வழி நடத்தி வருபவரும், அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திரு. அக்னி அவர்களின் முயற்சியால் தமிழ் உலகம் இதழ், அச்சு வடிவிலும், மின்னிதழாகவும் கொண்டு வரப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலகம்”! புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம்!
தமிழ் உலகம் இதழை, தமிழ் தேசியத்தில் அக்கறை கொண்டுள்ள புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டு தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி, புரட்சி தமிழன் சத்தியராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்!
அறிமுக நிகழ்ச்சியின் போது, அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ் உலகம் இதழின் ஆசிரியருமான திரு. அக்னி அவர்களோடு, எழுத்தாளர் திரு. வீரையன், ஆடிட்டர் கோபி நாராயணன் யாதவ், திரு. ஜீப்பிட்டர் இரவி (ஊடகவியலாளர் சங்கத் பொறுப்பாளர்), திருமதி. கிருஷ்ணவேணி (ஊடகவியலாளர்), உலகத் தமிழர் பேரவையின் தலைமையக பொறுப்பாளர் செல்வி வாசுகி ஆகியோர் பங்கெடுத்து சிறப்பித்தனர்.