
கர்நாடக தமிழர் கட்சி (karnataka thamilar katchi) – யினருடன் உலகத் தமிழர் பேரவை -யின் தலைவர் சந்திப்பு!
கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அன்மைக்காலத்தில் துவங்கப்பட்ட கட்சிதான், கர்நாடக தமிழர் கட்சி.
பெருந்தமிழர் ஐயா கவிஞர் பாவிசைகோ அவர்களின் வழியொட்டி, அன்னாரின் செயலாக்கத்தை கடைபிடித்து, அவரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றவே ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான், கர்நாடக தமிழர் கட்சி. கவிஞர் அவர்கள் தேசியத் தலைவரோடு நெருங்கியவர். அவரின் வழியை கடைசிவரை கடைபிடித்து வந்தவர். கவிஞர் நம்மை விட்டு பிரிந்து ஒரு ஆண்டு கடந்திருந்தாலும், அவரின் விருப்பத்தை நிறைவு செய்ய, அவரின் தொண்டர்கள் அவர் விட்டுச் சென்ற பாதையில் தற்போது நடைபோட துவங்கியுள்ளனர் என்பது மகிழ்ச்சிகுரிய செய்தி.
அக்கட்சியின் தலைவர் உட்பட, அதன் பொறுப்பாளர்கள் நேற்று (24-03-2019) சென்னைக்கு வருகை தந்திருந்தனர். அவர்களோடு கலந்துரையாடியதில் பல்வேறு கருத்துக்கள் உடன்பாடுடனேயே சென்றது.
உலகத் தமிழர் பேரவை – கர்நாடக தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துகிறது.
அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
#பாவிசைகோ