“என்னுடைய தமிழ் பெயர் ஈஸ்வரி. சீனா வானொலியில் தமிழ் அறிவிப்பாளராக நான் பணியாற்றினேன். நான் தற்போது சீனா-வின் பெய்ஜிங் நகரத்தில் உள்ள சீன நாட்டின் அயல் மொழிப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக் கல்வி, தமிழாய்வுத் துறையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.
தமிழ் மண்ணில் உள்ள தமிழ் மக்களை காண சென்னை வந்திருக்கிறேன். அப்பொழுது உலகத் தமிழர் பேரவையின் திரு. அக்னி அவர்களை சந்தித்தேன். அவர் எனக்கு பொன்னாடை போர்த்தி புத்தகங்களை பரிசளித்தார்”, என இப்படி அழகாக தமிழ் பேசி அசத்தியவர் செல்வி. சொ சின் (Zhou Xin) என்கிற சீனப் பெண். சென்னையில் 29-01-2019, ஆசியவியல் நிறுவனத்தில் தமிழன்பர்களோடு கலந்துரையாடலின் போதே இந்த சந்திப்பு நிகழ்ந்தது.