கொரோனா-வால் இதுவரை 4 தமிழர்கள் இறந்தனர்!

உலகம் முழுக்க 193 நாடுகளில் பரவி வாழும் 12 கோடி தமிழர்களில், கொரோனாவால் இப்போதுவரை ஐரோப்பாவில் 3 தமிழர்களும் தமிழகத்தில் ஒருவரும் மரணமடைந்ததுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் பல நாடுகளில் தீவிரமாகப் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், 177 நாடுகளில் இதுவரை 7,87,777க்கு மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், 37,815க்கு மேற்பட்டோரை காவு கொண்டுள்ள இந்த வைரஸ் தொற்றிலிருந்து 1,65,607 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகின் அதிகபட்சமாக இன்றுவரை அமெரிக்காவில் தொற்றிற்கு 1,64,253 பேரும், இதில் 3,165 பேர் மரணமடைந்துள்ளனர். அடுத்து இத்தாலியில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸால் இதுவரை 1,01,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு 11,500 ஆயிரத்தைத் தாண்டி தீவிரமாகவே அதிகரித்துச் செல்கின்றது.

7 கோடி தமிழர்களை கொண்டுள்ள தமிழகத்தில் 81 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளில் வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேர் கொரோனா – விலிருந்து தப்பித்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களால் பரவவுவதை தடுக்கும் பொருட்டு, மார்ச் 1ம் தேதிக்கு பின்னர் வந்தவர்களில் சுமார் 42,000 பேர்களில் கணிசமானர்களை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அனைவருக்கு தெரியும் வகையில், தடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது, அரசின் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 லட்சம் வீடுகளில் கொரோனா தொற்று உள்ளதா என தமிழக சுகாதாரத் துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுத்து வந்ததாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தை அடுத்து தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி என்றால் அது வீரம் விளைந்த ஈழத்தையே குறிக்கும். 2009 இறுதிப் போரின் வடுக்கள் அழியும் முன்பே. இங்கும் கொரோனா தொற்றை வெளிநாட்டிலிருந்த பிரச்சாரத்திற்கு வந்த கிருத்துவ பாதரியார் ஒருவர் சுமந்து வந்து தமிழர்களிடத்தில் பரப்பி விட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றிற்கு இதுவரை எவரும் சரியான மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதைக்கு வேறு நோய்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் மருந்துகளையே மாற்று மருந்தாக கொடுத்து சிலரை காப்பாற்றியுள்ளதாக நிருபிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, இயற்கையாக மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், கொரோனா தொற்று சில நாட்களில் தானாகவே அழிக்கப்பட்டு மறைந்து, தொற்று வந்த நபர்கள் நல்ல முறையில் நடமாடுகிறார்கள் என மருத்துவ ஆய்வுகள் காட்டுகிறது. இன்னும், சில ஆய்வுகள், வெப்பம் மிகுந்த நாடுகளில், கொரோனாவின் தாக்கம் குறைவாகவே காணப்படுவதாக காட்டுகின்றனர். தமிழகம் மற்றும் ஈழப் பகுதிகளில், இப்போதுதான் கோடை காலம் தொடங்குகிறது. இது இனி ஜீன் – ஜீலை வரை கோடை வெப்பம் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளதால், கொரோனா வைரஸ் சில மாதங்களில் ஒட்டு மொத்த தாக்கம் குறைந்து, பின்னர் இல்லாத ஒரு நிலையை அடையும் வாய்ப்புகள் உள்ளதென்பதாக தெரிகிறது.

இவ்வேளையில், தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி இதை குணமாக்கலாம் என சில தமிழ் மருத்துவர்கள் சொல்லுகின்றனர். ஆனால் அதை அறிவியல் பூர்வமாக இதுவரை யாரும் நிருபிக்க முடியவில்லை என்பதே உண்மை.

பொதுவாக, கொரோனா-வை தடுக்கும் என்பதாக உலகில் சொல்லப்படும் முறை என்னவெனில், சமூக இடைவெளியே என சொல்லப்படுகிறது. ஆனால், முற்றிலுமாக தொற்றை சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமாயின், ஒட்டு மொத்த மனித குலமே வீடுகளில் குறைந்தபட்சம் 14 நாட்கள் வேறு நபர்களோடு தொடர்பில்லாமல் இருத்தல் அவசியம் என சொல்லப்பட்டு, உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள், சட்டங்கள் மூலமாக வெளி நடமாட்டத்தை தடை செய்யப்பட்டு உள்ளதை கண்கூடாக இன்று காண முடிகிறது. இதுவே இன்று உலகின் மிகப் பெரிய மனித முடக்கமாக சொல்லப்படுகிறது.

எனினும், வைரஸ் பரவல் தீவிர நிலையிலேயே பரவிக்கொண்டிருப்பதுடன் உலக நாடுகள் பலவும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டு வருகின்றன. இதன் தாக்கமாக, பொருளாதார வீழ்ச்சியால் மனமுடைந்த ஜேர்மனியின் மாநில நிதியமைச்சர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அங்குள்ள ஹெய்சி என்ற மாநிலத்தின் நிதியமைச்சராக இருந்த தோமஸ் ஸ்கிபெர் கொரோனா பாதிப்பால் தனது மாநிலத்தின் பொருளாதார நிலைமை மோசமானதைக் கண்டு மனமுடைந்த அவர், பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து அப்பகுதி ஆளுநருடன் அடிக்கடி விவாதித்து வந்தும் அவை பலனளிக்காமல் போனதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபோல பல நிகழ்வுகள் இனி வரும் நாட்களில் நடக்கும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

இதேவேளை, நல்ல செய்தியாக கொரோனா வைரஸ் தொடங்கி சீனாவில் தற்போது வைரஸ் பாதிப்பு வெகுவாகக் குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக சீன செய்திகள் காட்டுகிறது.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>