உலக மனித உரிமைகள் தின விழாவில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் உரிமை உரையை நிகழ்த்தினார். அப்போது குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசும் போது, ‘ஈழத்தமிழருக்கும், இஸ்லாமியருக்கும் துரோகமிழைக்கிறது இந்திய அரசுகள்’ என சொல்லி வன்மையாக கண்டித்தார். (முழு பேச்சும் காணொளியில் காண்க….)
உலக மனித உரிமைகள் தினம், 15-12-2019 அன்று சென்னை, அண்ணா சாலை தொழிற்பேட்டையில் உள்ள ஆர்.வீ. டவர்ஸ் காலை நடந்தது.
முன்னதாக வரவேற்புரையை மனித உரிமைக் கழகத்தின் இயக்குநர் திரு. எம். குமார்ராஜ் வழங்கினார். உரிமை உரையை உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் மற்றும் திரு. நல்லப்பனார் நிகழ்த்தினர். மேனாள் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி திரு. கே. தனவேல் முன்னிலை வகித்தார். சிறப்பழைப்பாளராக டாக்டர் ச. தமிழரசன் அவர்கள் பங்கு கொண்டு சிறப்புரையாற்றினார். இறுதியில் உயர் நீதி மன்ற வழக்குரைஞர் திரு. சிவா நன்றி கூறினார்.
விழா ஏற்பாட்டாளரை சிறப்பிக்கும் வகையில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் நினைவு பரிசு ஒன்றையும், தமிழினப் படுகொலை புத்தகத்தையும் அன்பு பரிசாக வழங்கினார்.