மலேசியாவிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த 130 மலேசியர்கள், தாயகம் அனுப்பப்பட்டனர்!

தமிழகத்தில் தவித்து வந்த “மலேசிய தமிழர்கள்” 130 பேர் அனைவரும் தாயகம் திரும்பினர்.

“கொரோணா” தொற்று வைரசால், மொத்த உலகமே பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா வந்திருந்த மலேசிய தமிழர்கள் கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் தவித்து வந்தனர். இவர்களை,  மலேசிய ம இ கா (மலேசிய இந்திய காங்கிரஸ்) தேசிய தலைவரும், மலேசிய ராஜ்ஜிய சபை (மேலவை) சபாநாயகருமான டான்ஸ்ரீ S. A. விக்னேஸ்வரன் மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ M. சரவணன், தென்னிந்திய மலேசிய தூதர் சரவணன் ஆகியோரது விரைந்த ஏற்பாட்டில், இன்று (April 5) திருச்சியிலிருந்த சில பயணிகளையும் பேருந்தில் வரவழைத்து, ஓட்டு மொத்தமாக சுமார் 130 பயணிகளை சென்னையிலிருந்து Malindo விமான மூலம் அனைவரும் மலேசியாவிற்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர். இதே விமானத்தில் சென்னை மலேசிய தூதரக அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊழியர்களும் உடன் சென்றனர்.

ஆனாலும், இவர்களோடு செல்லவிருந்த சில தமிழர்கள், சில காரணங்களால், திருச்சி விமான நிலையத்தில பயணப்பட வழியில்லாமல் பறிதவித்தது கண்களை கலங்க செய்தது. இந்த செய்தியை காணொளியோடு, தமிழகத்தில் உள்ள உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு நமது உலகத் தமிழர் பேரவை கொண்டு சென்றது. உடனடியாக திருச்சி டி.ஐ.ஜி. திரு. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். அவர்கள் நம்மை தொடர்பெடுத்து, பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ள சொல்லி உள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அவ்வாறு நம்மை தொடர்பு கொள்ளும்பட்சத்தில், உடனடியாக அவர்கள் மலேசியா திரும்ப நமது உலகத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: