புத்தக கண்காட்சியில், புதிய நூலின் வாசனையை கடை எண் : 333 ல் உணர்ந்தேன் – அக்னி!

புத்தக கண்காட்சியில், புதிய நூலின் வாசனையை கடை எண் : 333 ல் உணர்ந்தேன் - அக்னி!

புத்தக கண்காட்சியில், புதிய நூலின் வாசனையை கடை எண் : 333 ல் உணர்ந்தேன் – அக்னி!

700-க்கும் மேற்பட்ட புத்தக கடைகளை சென்னை 42-வது புத்தக கண்காட்சியில் இடம் பெற்றிருந்தாலும், எனது நண்பர்கள் பலர் தங்களுடைய அங்காடியிலிருந்து புத்தம் புதிய நூல்களை அறிமுகம் செய்திருந்தபோதிலும், கடை எண் : 333-க்கு அருகே சென்ற போது… அங்கே நாம் தமிழர் பொறுப்பாளர் தம்பி சே. பாக்கியராசன் என்னை எழுந்து வந்து வரவேற்று, தான் இம்முறை செந்தமிழன் சீமானின் 2010 முதல் 2018 வரை நிகழ்த்திய பல ஆயிரம் உரைகளில் தேர்வு செய்யப்பட்ட முத்தான உரைகளில், 25 இன்றியமையாத தலைப்புகளாக பிரித்து 208 பக்கங்களை கொண்ட, உயரக வழ வழப்பான வெள்ளைத்தாளில் பல வண்ண அரிய புகைப்படங்களை உள்ளடக்கிய அற்புதமாக தொகுக்கப்பட்டிருந்த ‘தமிழர் இறையாண்மை அரசியல்’ நூலை எனக்கு தம்பி அன்பு பரிசளித்த போதுதான் – புத்தக கண்காட்சியில் புதிய நூலின் வாசனையை நுகர்ந்த உணர்வு ஏற்பட்டது என்பதை மறைக்க அல்லது மறுக்க இயலாது.

20-25 ஆண்டுகளாக திரு. சீமான் அவர்கள் நெருக்கமாக தெரிந்திருந்தபோதும், தம்பி திரைப்படம் வெற்றியை அடுத்து, அடுத்த படத்திற்கான சென்னை, தி.நகர், போக் சாலை அலுவலகத்தில் தனியே 2.5 மணி நேரம் சந்தித்து உரையாடியதை மறக்க இயலாது. அப்போதே அவரது பேச்சில் தமிழ் தேசியத்தின் அக்கரை மேலொங்கி இருந்ததை காண முடிந்தது. ஆனால், அன்றைய பொழுது தேசியத் தலைவரின் மீதிருந்த அதித நம்பிக்கை வேறு பக்கங்களில், வேறுறொரு சிந்தனைக்கு எம்மை மாற்ற இயலாத வகையில் இருந்து வந்தது.

திரு. சிமானின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் மதுரையில் நடந்த நாம் தமிழர் தொடக்க விழாவில் 10 நிமிடங்கள் மேடையில் அமர்ந்த பின்னர், அவசர வேலை காரணமாக திரும்ப வேண்டியிருந்து. சில நேரங்களில் தனியே சந்தித்து தமிழ் தேசியம் குறித்து சிமான் அவர்களுடன் பேசி வந்ததையும் நினைவு கொள்கிறேன்.

சில பல தமிழ் தேசிய சிந்தனைகளில் சில வேளைகளில் நெருடல்கள் இருப்பினும், அண்ணன் திரு. சிமானின் மேடைப் பேச்சை ரசிப்பதில் தவறுவதில்லை. எளிய மக்களிடத்தில் எளிய நடையில் அவரது பேச்சு சென்று சேர்வதை ரசிக்க கூடியதாகவே இருந்திருக்கிறது. அவ்வகையில் செந்தமிழன் சீமானின் 2010 முதல் 2018 வரை நிகழ்த்திய பல ஆயிரம் உரைகளில் தேர்வு செய்யப்பட்டதை அச்சிட்ட தம்பி சே. பாக்கியராசனின் முதல் தொகுப்பு வரவேற்று, பாராட்டுக்குரியதாகும். பாகம் ஒன்றோடு நிற்காமல் தொடந்து திரு. சீமான் அவர்களது உரை தொகுப்புகள் கொண்டு வர வேண்டும் என்பதை அனைத்து தமிழ் மக்களது ஆவாவாக இருக்கிறது என்பது மட்டும் உறுதி.

அக்னி
ஒருங்கிணைப்பாளர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: