தமிழக கோயில்களில், பாலியல் சிலைகள் – உலகத் தமிழர் பேரவையின் நிலை!

தமிழக கோயில்களில், பாலியல் சிலைகள் – உலகத் தமிழர் பேரவையின் நிலை!

உலகில் தோன்றிய உயிரினங்களில் உயர்ந்து நிற்பது மனித குலம். அது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பெண் மற்றொன்று ஆண். இவர்கள் இல்லாமல் மனித குலம் முழுமை பெறாது. இவர்களுக்குள் இருக்கும் அன்னோன்னியம், அதாவது வெளிப்படையாக சொன்னால் இவர்கள் இருவரும் இணையாமல் மனித குலம் தொடர்ச்சி பெறாது. இந்த உறவு பற்றி ஆதிகாலம் தொட்டே, நம் தமிழர்கள் மறைமுகப்பாடமாக கோவில்களில் குறிப்பிட்ட சில இடங்களில் சிலைகளாக வடித்துள்ளனர். இதையே வெளிநாடுகளில் அவர்களின் கலாச்சாரப்படி வெளிப்படையாக நடுவீதிகளிலே சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணக்கூடியதாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மறைமுகமாகவும் இது சொல்லப்பட்டுள்ளது. இதில் தவறேதும் இல்லாதபட்சத்தில் தான் ஆட்சியாளர்களும் மன்னர்களும் இவ்வகை செயல்பாட்டை பாதுகாத்தே வந்துள்ளனர். உலகத்த தமிழர் பேரவையும் இந்த கருத்தை ஏற்கிறது. இன்று பல பள்ளிகளில் பாலியல் கல்வியை கட்டாய படமாக்க பல பெரிய சமூக அமைப்புகள் அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் . அண்மையில் உச்ச நீதி மன்றம் கூட ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்துள்ளதை அறியலாம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்குடியை சார்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் அவர்கள் கோவில்களில் பாலியல் சிலைகள் உள்ளதை கேலியாக பொதுவெளியில் பேசினார். பின்னர் வருத்தம் தெரிவித்து அறிக்கையும் விட்டுள்ளார்.

உலகத் தமிழர் பேரவை சாதிகளில் ஏற்றத்தாழ்வற்ற நிலையை ஏற்றுக்கொண்டுள்ளது. மதங்கள் அவரவர் விருப்பப்படி, அவர்களில் நம்பிக்கையில் நாம் தலையிடுவது இல்லை. தமிழர் என்ற ஒற்றை இனம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதே உலகத்த தமிழர் பேரவையின் நோக்கங்களில் ஒன்று. இந்த உயரிய நோக்கங்களை வென்றெடுக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ளது, உலகத் தமிழர் பேரவை. இதையே உறுப்பினர்களிடமும் எதிர்பார்க்கிறோம்.

இனி சிக்கலான விவாதங்களை ஆரோக்கியமாக பெருந்தன்மையோடு மற்றவர்கள் ஏற்கும்படி கருத்தை பதிவு செய்ய கோரிக்கை வைக்கப்படுகிறது. தவறான வார்த்தைகளை இனி உறுப்பினர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இனிமையாகவும் பொறுப்புடன் நாம் பயணிப்போம். தமிழர்களாக ஒன்று படுவோம்.

  • உலகத் தமிழர் பேரவை
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: