திருகோணமலை மாவட்டம், கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் கே.எம்.ஹாதிம் பார்சிலோனாவுக்கு செல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். உதைபந்தாட்டப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட போட்டியில் பங்குபற்றுவதற்காக அவர் பார்சிலோனாவுக்குச் செல்லவுள்ளார்.
அண்மையில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனமும் கல்வி அமைச்சும் இணைந்து நடாத்திய ரோட் டூ பார்சிலோனா போட்டியில், பல அணிகளை தோற்கடித்து இறுதிச் சுற்றில் கிண்ணியா அல் அக்ஸா அணி சம்பியனானது. இலங்கையிலில் இருந்து 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் குறித்த போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு மாணவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.