தமிழினத்திக்காக அயராது உழைத்த திரு.சுப்பையா பிரதீப் அவர்கள் கொரோனாவிற்கு பலி!

பெல்ஜியத்தை வாழ்விடமாகவும் கொண்ட திரு சுப்பையா பிரதீப் (வயது 40) அவர்கள் கடந்த 12-05-2020 செவ்வாய்க்கிழமை கொரோனா என்னும் கொடூரத்தால் மரணமடைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 65 நாட்களாக மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

இவர் சங்கரியார் வளவு, திருப்பூர், மயிலிட்டியை பிறப்பிடமாக கொண்டவராவார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

பெல்ஜியம் நாட்டில் தமிழ் கல்வி முதல்வராகவும், தமிழ் மொழிக்காவும் , தமிழ் இனத்திற்காகவும் அயராது உழைத்தவர் திரு சுப்பையா பிரதீப் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: