தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி இடைநீக்கம்!

தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி இடைநீக்கம்!

தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி இடைநீக்கம்!

பிரிட்டனில் இலங்கை தமிழர்களுக்கு சைகை மூலமாக கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இலங்கை சுதந்திர தினத்தையொட்டி, பிரிட்டனில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, இலங்கைப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அந்நாட்டைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் பலர் தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இலங்கை தூதரக ராணுவப் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னான்டோ, தமிழர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என்பது போல சைகை காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூதரக அதிகாரிகளுடன் இலங்கை தமிழர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோ சைகை காண்பித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து, அவரை பணி நீக்கம் செய்யக் கோரி பிரிட்டன் அரசுக்கு இலங்கை வம்சாவளி எம்.பி.க்கள் கடிதம் எழுதினர்.

இந்நிலையில், ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோவை சஸ்பெண்ட் செய்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் ராணுவ அதிகாரியான பிரியங்க பெர்னான்டோ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர் எனக் கூறப்படுகிறது. உதாரணமாக, 2008-இல் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது, முல்லைத் தீவில் உள்ள மருத்துவமனைகள் மீது வெடிகுண்டுகள் வீசிய இலங்கை ராணுவத்தின் 59-வது பிரிவுக்கு பிரியங்க பெர்னான்டோ தலைமை வகித்திருக்கிறார்.

  • தி இந்து
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: