எலிசபெத் மகாராணியிடம் இருந்து விருது பெற இலங்கைப் பெண்ணான பாக்கியா விஜயவர்த்த தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து “மகாராணியின் இளம் தலைவர்” விருதை இவர் பெற உள்ளார். இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சமூகத்தில், நாட்டில் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளம் தலைமுறையினருக்கு “மகாராணி இளம் தலைவர் விருது” வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்விருதுக்கு சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 29 வயதான பாக்கியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உணவுப் பாதுகாப்பை மக்களிடையே ஊக்குவித்தமைக்காக இவ்விருது பாக்கியாவுக்கு வழங்கப்படுகிறது. பாக்கியா வீட்டுத் தோட்டத்தில் இருந்து உணவுப் பொருட்கள், காய்கறி, பழவகைகளை உற்பத்தி செய்யுமாறு பொதுமக்களை தூண்டி வந்துள்ளார். ஆயிரக் கணக்கான போட்டியாளர்களிடையே இலங்கையைச் சேர்ந்த பாக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.