தென் ஆப்பிரிக்க குடியரசின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 9ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பரவிய வன்முறையில் கடைகள் சூறையாடப்பட்டன. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. அப்போது தமிழர்களின் வசிப்பிடங்கள், வர்த்தகம் செய்யும் இடங்கள் உள்ளிட்டவையும் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. இதனால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகினர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க இந்தியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு துரிதப்படுத்தியது. இதற்காக தென் ஆப்பிரிக்காவின் குவாசூலு நெட்டால் மற்றும் கேடாங் மாகாணத் தமிழர்கள் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.