தனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி (மாறன்) தர்மலிங்கம், இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனாவார். கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்கு பெற்று இருக்கின்றார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார்.
இவர், 2008 மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளேமார்த் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வு தளபதி கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சாள்ஸ்ன் மருமகனாவார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
தற்போது, Germany-Bremen நகரின் வசித்து வருகிறார்.
உலகத்தரத்ததில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழுமுறை நகரச்சுற்று வட்டத்திலும், ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், ஒரு தடவை ஜேர்மனி நாட்டின் சம்பியனாகவும் வந்திருக்கின்றார்.
யூலை 7ந் திகதி அன்று நடந்த Light Welterweight மூன்று சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்ரினா நாட்டைச் சேர்ந்த Carlos Aquino வீரனை 3-0 என்ற புள்ளியில் வென்று இருக்கின்றார்.
2016ல் Rioவில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து சிறப்பித்திருந்தார்.
இதுவரை தன்னுடன் போட்டியிட்ட தென் ஆப்ரிக்கா, சீனா, உக்ரெயின், போலந்து, சுவிற்சலாந்து, பொஸ்வானா நாட்டு குத்துச்சண்டை வீரர்களை வென்ற துளசி தருமலிங்கம், ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் அனைத்து நாட்டு வீரர்களையும் எதிர் கொண்டுள்ளார். பல சர்வதேச பதக்கங்களை பெற்ற சிறந்த விளையாட்டு வீரன்.