லண்டன் கிங்ஸ்டன் மருத்துவனையின் ஆலோசகர் டாக்டர் அன்டன் செபஸ்டியன் பிள்ளை கொரோனா தாக்கி மரணம்!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் லண்டன் கிங்ஸ்டன் (Kingston) மருத்துவனையின் ஆலோசகரான டாக்டர் அன்டன் செபஸ்டியன் பிள்ளை என்கிற திலகன் அவர்கள் மரணமடைந்தார்.

74 வயதான வயதான டாக்டர் அன்டன் செபஸ்டியன் பிள்ளை, ஏற்கனவே பணி ஓய்வு பெற்றிருந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட கொரோனா தொற்று வைரஸ் தாக்கத்தினையடுத்து, மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தனது தள்ளாத வயதிலும் மருத்துவ சேவைக்குத் திரும்பியிருந்தார்.

தானுண்டு, தன் பாடுண்டு என நினைக்காமல், ‘ஏன் சென்று சிக்கலுக்குள் மாட்டிக் கொள்வான்…. நாம் தப்பித்துக் கொள்வோமே’ என்றில்லாமல் கொரோனா தொற்று வைரஸினால் பீடிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றச் சென்ற இந்த மூத்த மருத்துவர், தன் உயிரை நாட்டுக்காக, சமூகத்திற்காக, மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

அன்டன் செபஸ்டியன் அவர்களே! உங்களின் கடமை உணர்வுக்கு, அர்ப்பணிப்புக்கு, புலம் பெயர்ந்த தமிழர்கள் உட்பட உலகில் வாழும் அத்தனை தமிழர்களும் தலை சாய்த்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: