லண்டனில் மற்றுமொறு தமிழர் கொரோனாவுக்கு பலி!

கொரோனா அறிகுறியுடன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ். குகன் வீதி, மயிலிட்டி (திருப்பூர் ஒன்றியம்) யை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் (வயது 67) என்பவர் 13-04-2020 திங்கட்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வந்த நிலையில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்திருந்தார். மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து ஒரு வாரத்திற்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தவர்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு மருத்துவமனை தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சின்னையா அமிர்தலிங்கத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும் நுரையீரல் செலிழந்து வருவதாகவும் சென்ற சனிக்கிழமை இரவு மருத்துவமனை தரப்பிலிருந்து குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

அவையங்கள் செயலிழந்த நிலையில் 13-04-2020 அதிகாலை குடும்பத்தினரை பார்வையிட அனுக்கப்பட்டிருந்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: