பிரபல சமூக செயற்பாட்டாளராக பிரான்ஸ்சில் பணியாற்றிய திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை, யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், கொண்டிருந்தவர், கடந்த 09.04.2020 அன்று காலை கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. மருதையினர் பார்வதி பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான திரு. நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும், திரு. பாலச்சந்திரன் நாகலிங்கம் அவர்களது (முன்னாள் தலைவர் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் FRANCE, நாடுகடந்த அரசின் மேனாள் உள்துறை அமைச்சராகவும், மற்றும் சபா நாயகரும், சமூக செயற்பாட்டாளராகவும், பிரபல தொழிலதிபரின் (FAST AUTO, CARROSSERIE) அன்பு மனைவியுமான கமலேந்திரா (நாடுகடந்த அரசின் மாவீரர் , போராளிகள் குடும்ப நல உதவி அமைச்சராகவும் மற்றும் தொழிலதிபர் கல்பனா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார். இதுபோல் ஜெயசீலனின் பாசமிகு பெரியம்மாவும், மயூரியின் பாசமிகு மாமியாரும், சுகானா, கயிலன், றோசான் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை மறைவுக்கு நாடு கடந்த அரசின் பிரதமர் திரு. ருத்திர குமார் அவர்கள் இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
பிறப்பு : 12 JUN 1953 இறப்பு : 09 APR 2020
தொடர்பு :
பாலச்சந்திரன் – கணவர் 0662365007
கமலேந்திரா — மகன் 0669174390