இலண்டனின் மற்றொரு தமிழ் இளைஞர் கொரோனா-வுக்கு பலி!

லண்டனில் புலம்பெயர்ந்து அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் அழகரத்தினம் ஜீவிதன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:

கடந்த ஒரு மாதமாக முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அழகரத்தினம் ஜீவிதன், லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இரு தினங்களுக்கு முன்பாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

லண்டனுக்கு அகதி தஞ்சம் கோரி சென்று பத்து ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் இன்னும் அழகரத்தினம் ஜீவிதன் அகதிக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: