ராஜபக்ஸக்களின் ராஜதந்திரத்திரத்திற்கு, குடுமிச் சண்டையில் குத்தி முறியும் தமிழ்த் தலைமைகள் ஈடுகொடுப்பார்களா?

“இது முடிவல்ல முடிவின் ஆரம்பம்” இராமர்பாலத்தில் சீனத் தூதுவர்!

ராஜபக்ஸக்களின் ராஜதந்திரத்திரத்திற்கு, குடுமிச் சண்டையில் குத்தி முறியும் தமிழ்த் தலைமைகள் ஈடுகொடுப்பார்களா?

இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்ய தேர்ந்தெடுத்த இடம், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலம்.

மன்னார் ஊடாக இராமர் பாலத்தை அடைந்த சீனத் தூதுவர், அதன் மணற்றிடலில் நின்று அதனை கண்காணித்து “இந்தப் பயணம் இன்றைய முடிவல்ல முடிவில் ஒரு ஆரம்பம் என்றார்.

தமிழ் மனங்களை வென்றெடுப்பதற்கு வட மாகாணத்தில் ஓர் சூறாவழிப் பயணம்.

அந்த முதலாவது சுற்றில் யாழ் நூலகம், நல்லூர் ஆலையம் உள்ளிட்ட வரலாற்று பாரம்பரியங்களை அணுகி தமிழர் கலாசாரத்துடன் நெருங்கும் இராஜதந்திர நகர்வை சீனா ஆரம்பித்தது.

யாழ் நூலகத்திற்கு கணினிகள், நூல்கள் கிடைத்தன. இணையவழி நூலகமாக உருவாக்கும் கோரிக்கை தொடர்பில் ஆராய இணங்கியது.

அடுத்து வடக்கை கவலைகொள்ளும் மீனவர்களின் வாழ்வாதரம் குறித்த அக்கறையும், 20 மில்லியன் பெறுமதியான உலருணவு, வலைகள் முதலானவற்றை அன்பளிப்பு செய்தது.

இப்படி யாழ் நல்லூரில் தமிழர் கலாசாரத்தை அணைத்த சீனத் தூதுவர் Qi Zhenhong குழுவினர் மன்னார் தாழ்வுபாடு கடற்படை முகாமில் நேற்று முற்பகல் (17.12.21) தரையிறங்கினார்.

அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படைப் படகுகளில் ஏறிய அவர்கள் 1 மணிநேரத்தில் 17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலத்தை அடைந்தனர். 20 நிமிடங்களை இராமர் பாலத்தில் கழித்தனர்.

பின்னர் தாழ்வுபாடு கடற்படை முகாமிற்கு திரும்பிய சீனத் தூதுவர் குழு, ரின் மீன் தயாரிப்பு தொழிற்சாலையையும் பார்வையிட்டனர்.

சீனக் குழுவினரின் வடக்கு சுற்றிவளைப்பின் பின், வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடங்களை வழங்கியுள்ளதாகவும் இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் எனவும், இலங்கையின் இடதுசாரியாய் உருவாகி, வலதுசாரி முகாமிலேயே தஞ்சம் அடைந்திருக்கும் அமைச்சர் வாசுதேவநாணயக்கார கூறியுள்ளார்.

ஆக ராஜபக்ஸக்களின் ராஜதந்திர நகர்வுகள் மிகவும் திட்டமிட்டவையாகவும், சாதுரியமானவையாகவும், தொடர்கின்றன.

பூகோள அரசியலில், மேற்கையும், தெற்கையும் கையாழ்வதற்கும் –

பிராந்திய அரசியலில் இந்தியாவையும் சீனாவையும் கையாள்வதற்கும், –

வடக்கையும் தமிழர்களையும் காய்களாக பயண்படுத்தும் ராஜபக்ஸக்களின் ராஜ தந்திரத்திரத்திற்கு, குடுமிச் சண்டையில் குத்தி முறியும் தமிழ்த் தலைமைகள் ஈடுகொடுப்பார்களா?

May be an image of 9 people and people standing
May be an image of 5 people and people standing
May be an image of 3 people and people standing
May be an image of 3 people and people standing
May be an image of 6 people, people standing and outdoors

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: