தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கான 100 அடி நீளமான அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தீவிலே வவுனியாவில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயம் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒரு கோயிலாகும். வடமாகாணத்தில் உள்ள பல நாகதம்பிரான் ஆலயங்கள் நாகர் காலத்தில் இருந்தே இருந்து வருகின்றன. நாகர்கள் தமிழர்கள் என்று பேராசிரியர் பத்மநாதன் கூறியிருக்கின்றார். ஆகவே நாகதம்பிரான் வழிபாடு இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய வழிபாடு என்று கூறமுடியும். இலங்கைத் தீவின் பூர்வீக குடிகளாக இனங்காணப்பட்ட தமிழர்களின் புராதன வரலாறுகள் முறையாக பேனப்படாமையால் இன்று எமது புராதன வரலாறுகள் மாற்றி எழுதப்படுவதுடன், வேண்டுமென்றே அழிக்கப்படுகின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். எமது ஆவணங்கள் பேணி பாதுகாக்க முடியாதவிடத்து கடல் கடந்த நாடுகளில் பேணக்கூடிய ஆவண காப்பகத்தில் பேணி பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இந்துக்களின் புராதன ஆலயங்களும், பல புராணக்கதைகளை கொண்ட ஆலயங்களும் அழிக்கப்பட்டு அல்லது உருச்சிதைக்கப்பட்டு அவ்விடத்தில் இந்துக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தெரியாதவகையில் உருமறைப்பு செய்யப்ட்டுள்ளன. இவ்வாறான கபட நோக்கம் கொண்ட நிகழ்வுகளில் இருந்து எமது ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>