ஈ.பி.ஆர்.எல்.எப் , புளொட் என்பன தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விட்டு நெடுநாளாக விலகியும் மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்களாக இருந்து வந்தவர்களும் சேர்ந்து புதிதாக உருவானதுதான் தமிழர் விடுதலை கூட்டணி.
சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையேழுத்திட்டுள்ளனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இது தொடர்பான புரிந்துணர்வு கலந்துரையாடல் ஒன்று யாழ். நாச்சிமார் கோவிலடியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் செயலாளர் அனந்த சங்கரி தலைமையில் இடம் பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மன்னார் சிவில் அமைப்புகளின் தலைவர் சிவகரன், ஜனநாயக தமிழரசு கட்சி மற்றும் முன்னாள் போராளிகள், ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் சிவகரன் உட்பட பலர் மூத்த அரசியல்வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் ஏனைய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
அந்த கூட்டணியில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்), புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள், சமூக சமத்துவத்தினை ஊக்குவிக்கும் பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளும் இணைந்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழரின் ஒற்றுமையை வலியுறுத்தி தமிழினத் தலைவர் தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியாலும் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸாலும் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னமானஉதயசூரியன் சின்னத்தையே இப்புதிய கூட்டமைப்பு தனது பொதுவான தேர்தல் சின்னமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
அதுமட்டுமன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்த போது உதயசூரியன் சின்னமே கூட்டமைப்பின் சின்னமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக இடைப்பட்ட காலத்தில் அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாக இருந்ததுடன், மீண்டும் ஒற்றுமையின் சின்னமாக, தமிழ் மக்களின் உரிமைக் குரலை வெளிப்படுத்தும் சின்னமாக, தமிழ் மக்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தும் சின்னமாக உதய சூரியனை பொதுச் சின்னமாக தாம் ஏற்றுக் கொண்டுள்ளதாக புதிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எமது முன்னாள் தலைவர்களால் உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் வடக்கு – கிழக்கு என்பது தமிழர்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு உரித்தான சுய நிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்கப்பட்டு ஒருமித்த நாட்டுக்குள் தமிழர்களுக்கான சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும். அதுவே அவர்களின் பாதுகாப்பையும் தனித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரே வழி என்ற அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கையாகவும், நோக்கமாகவும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்படுகின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் அந்த சந்திப்பின் பின் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய ஒரு கூட்டணி அமைத்து அந்த கூட்டணியின் ஊடாக தேர்தலை எதிர் கொள்வதற்குரிய பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர்.