தமிழர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மோடி!

தமிழர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மோடி!

தமிழர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மோடி!

நீண்ட காலமாக தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு காலம் கடத்தாமல் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்திடம் அழுத்தமாக கூறியுள்ளேன் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் ஒற்றையாட்சியை ஒரு போதும் ஏற்க முடியாது. தமிழ் பேசும் மாகாணங்களான வடக்கு, கிழக்கை இணைத்து அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமர் மோடியிடம் தனது நிலைப்பாட்டினை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இலங்கைக்கு பயணம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் இறுதி அம்சமாக பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முக்கிய சந்திப்பொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (12.05.2017) மாலை நடைபெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய தரப்பில் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் ஜெய்சங்கர், இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

40 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தாவது:

இந்திய பிரதமர் உடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்திருந்தது. அவர் இறுதி நேரத்தில் நெருக்கடியான நிகழ்ச்சி நிரல் இருந்தாலும் எம்முடன் பொறுமையாக கலந்துரையாடினார்.

இதன் போது சம்பந்தன் ஜயா தற்போது புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குதவற்கான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கடந்த வருடமே அரசியலமைப்பு இடைக்கால வரைபொன்று வெளியிடப்பட்டு முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த விடயங்களில் பிரதான கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற கருத்தியல் தொடர்பிலான வேற்றுமைகள் கட்சி சார்ந்த விடயங்கள் தாமதங்களை ஏற்படுத்துகின்றன.

இதன் காரணமாக புதிய அரசியல் சாசன செயற்பாடுகள் காலதாமதமாகி செல்கின்றன. எம்மை பொறுத்த வரையில் ஐக்கிய இலங்கைக்குள் பிளவு படாத பிரிக்க முடியாத நாட்டினுள் அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இந்த அதிகார பகிர்வு ஒற்றையாட்சிக்குள் நிச்சயமாக மேற்கொள்ள முடியாது. சமஷ்டி அடிப்படையிலேயே அந்த அதிகார பகிர்வு இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எட்டு மாவட்டங்களை கொண்டிருக்கின்றன. அவற்றில் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். நிலத் தொடர்ச்சியான அந்த பூமி ஒன்றாக இருக்க வேண்டும். ஆகவே வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் பிராந்தியங்கள் இணைக்கப்பட வேண்டும்.

அதிகார பகிர்வு விடயத்தில் சட்டம் ஒழுங்கு, நிலம், காவல் துறை போன்ற விடயங்கள் இந்திய பிராந்தியங்களுக்கு காணப்படும் அதிகாரத்தை ஒத்தாக இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து சம்பந்தன் ஐயா வடக்கு, கிழக்கில் நடைபெற்று வருகின்றன நில மீட்பு போராட்டங்கள் வேலையில்லாத பட்டதாரிகளின் போராட்டங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுகொண்டார்.

அத்துடன் இந்தியா பாரிய உற்பத்தி விற்பனைச் சந்தையை கொண்டிருக்கின்றது. இலங்கையின் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. ஆகவே விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிராந்தியங்களின் அபிவிருத்தியை மையமாக வைத்து முதலீடு செய்வதற்கு முன்வர வேண்டும்.

இதன் மூலம் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு, வேலையில்லா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அத்துடன் அரசியல் கைதிகள் மற்றும் வாழ்வாதார தேவைப்பாடுகள் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய விடயங்கள் குறித்தும் தாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோரினார்.

இச்சமயத்தில் பதிலளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் இடம் பெற்று வருவதை நாங்கள் அவதானித்தோம். அந்த விடயங்கள் கடந்த வருடமே நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. கடந்த மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க டெல்லிக்கு வருகை தந்திருந்த போது இலங்கையின் அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக கலந்துரையாடினேன்.

அதன் போது இந்த விடயங்களை முழுமையாக முன்னெடுக்குமாறு கூறியுள்ளேன். தற்போதும் கூட அரசியலமைப்பு விடயம் உட்பட ஏனைய விடயங்களை ஆக்கபூர்வமாக முன்னெடுத்து விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளேன்.

பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணாது கால தாமதம் தொடருமாக இருந்தால் சவால்களை சந்திக்க நேரிடும் என்பதையும் அவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளேன்.

அதே போன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இந்தியா தொடர்ந்தும் தன்னாலான உதவிகளையும் பங்களிப்புக்களையும் செய்து வருகின்றது. இந்தியா தொடர்ந்தும் உங்களுடனையே இருக்கும் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பின் தலைவரை பார்த்து நீங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொறுமையாக கையாள்கின்றீர்கள் உங்களது தலைமைத்துவம் அவர்களுக்கு தொடர்ச்சியாக அவசியம் உங்களின் அணுகுமுறை செயற்பாடுகளை நாம் பாராட்டுகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: