அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபையில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. வடமாகாண சபையின் அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
அதன் போது மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததுடன் சபையில் போராட்டம் நடத்த அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
அவைத்தலைவர் அனுமதியளித்ததை அடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது இருக்கைகளில் இருந்து எழும்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.