தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்குமாறு ராணுவத்துக்கு இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு!

தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்குமாறு ராணுவத்துக்கு இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு!

தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்குமாறு ராணுவத்துக்கு இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு!

தனி ஈழம் கோரி பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் போராடி வந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் அமைப்புமீதான போரை தீவிரப்படுத்தியது. 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, யாழ்ப்பாணம் பகுதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதேபோல, விடுதலைப் புலிகள், பிரபாகரன் உட்பட அவரின் குடும்பத்தினர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதேபோல, தமிழர்களின் சொந்த நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. தொடர்ந்து, அந்நிலங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. தமிழர்கள் பெரும்பாலானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில், ராஜபக்சே தோல்வியைத் தழுவ, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மைத்ரிபால சிறீசேனா இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போர் முடிவுக்கு வந்ததால், தமிழர்கள் பகுதியில் மீள் உருவாக்கம் நடைபெற்று வந்தன. இந்தியா, ஐ.நா சார்பில் தமிழர்கள் மீள் கட்டமைப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதன் பயனாக, முகாமில் இருந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் இடங்களுக்குப் புலம்பெயர்ந்தனர். எனினும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து அவர்களின் சொந்த நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்படாமலே ராணுவத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதற்குத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்நிலையில், தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க, அந்நாட்டு அதிபர் சிறிசேனா ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழர் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ராணுவத்தினர் தமிழர்களின் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏற்கெனவே முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 85 சதவிகித நிலங்களை ஒப்படைத்துவிட்டதாகவும், தற்போது வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள நிலங்களை அவர்களின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: