இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க உடன்படிக்கை கையெழுத்து!

இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க உடன்படிக்கை கையெழுத்து!

இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க உடன்படிக்கை கையெழுத்து!

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால், நாட்டில் தொடர்ந்தும் மின்சார விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

எனினும், நாட்டில் சூழற்சி முறையில் அமுல்படுத்தப்பட்டிருந்த மின்வெட்டு, இன்று முதல் 10-04-2019 வழமைக்கு திரும்பும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை பெற்று, நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் வறட்சியுடனான கால நிலையினால் சுமார் ஒரு லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாக நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார். மேலும், நாட்டில் சூரியன் உச்சத்தில் காணப்படுகின்றமையினால் தொடர்ந்தும் கடும் வெயிலுடனான காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அமைச்சுக்கும், கனேடிய கமர்ஷியல் கோப்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை 09-04-2019 அன்று கையெழுத்திடப்பட்டது.

மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவாட்ஸ் சக்தி வாய்ந்த மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையே கையெழுத்திடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையங்களினால் 2030 ஆம் ஆண்டில், இலங்கையின் மின்சார தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்துக் கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக மகாவலி வலயத்திற்குட்பட்ட மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தை மையப்படுத்தி இந்த முதலாவது சூரிய மின்சக்தி நிலையம் கட்டப்படவுள்ளது.

சூரிய படல்கள் மற்றும் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய மின்கலங்களைக் கொண்டு இந்த சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்திற்காக, குறித்த நீர்த்தேக்கத்தில் 500 ஏக்கர் அளவிலான இடம் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், அந்த பரப்பளவானது நீர்த்தேக்கத்தின் 4 சதவீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சூரிய மின்சக்தி நிலைய திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய எதிர்பார்க்கும் அதேவேளை, முதற்கட்டமாக 10 மெகாவோர்ட் மின்சாரத்தை இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வரும் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் 100 மெகாவாட் மின்சாரத்தை பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி முறைகளை கையாளும் முகமாகவே மகாவலி பொருளாதார வலயங்களுக்குட்பட்ட நீர்த் தேக்கங்களில் இந்த மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>