இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஆழ்கடல் மீன்பிடிதான் தீர்வு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே!

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஆழ்கடல் மீன்பிடிதான் தீர்வு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே!

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஆழ்கடல் மீன்பிடிதான் தீர்வு என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி (தூத்துக்குடி) நவாஸ்கனி (ராம நாதபுரம்), சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் (கடையநல்லூர்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் யூசுப், முன்னாள் மக்களவை உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை தலைநகர் கொழும்பில் நேற்று 14 -09- 2019 சந்தித்து கலந்துரையாடினர்.

இதில் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் வட மாகாணப் பகுதிகளிலிருந்து ராணுவம் முழு மையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும், ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலிருந்து வரும் 13-வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையை நீக்க வேண்டும், அரபுக் கல்லூரிகள், பள்ளிவாசல்கள், காதி நீதிமன்றங்கள் மற்றும் ஹலால் விவகாரம் உள்ளிட்டவற்றுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்.

இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் மனிதாபிமான முறையில் விடுதலை செய்வதுடன் இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசியல் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். மேலும் இலங்கையிலுள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் பிரச்சினைகளைப் பற்றியும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த கலந்துரையாடலின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை என்பது நீண்ட காலமாக நீடிப்பதாகும். இதற்கு இரு நாட்டு மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபடுவதன் மூலம்தான் நிரந்தரத் தீர்வு காண முடியும். இலங்கையில் தமிழர்கள் வாழும் வட மாகாணத்தின் பொருளா தாரத்தையும், சுற்றுலாவையும் மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக தலைமன்னாரிலிருந்து ராமேசுவரத்துக்கு சரக்கு வசதியுடன் கூடிய பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

முன்னதாக, எம்பிக்கள் கனி மொழி, நவாஸ்கனி ஆகியோர் இலங்கை மீன்வளத்துறை அமைச் சர் திலிப் வெதஆராச்சியுடன் மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாடினர். அப்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து கனிமொழி தெரிவித்தார்.

இதை மறுத்த இலங்கை அமைச்சர், இனி தாக்குதல் சம்பவங் கள் நடைபெறாது என உறுதியளித்ததுடன் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது இதற்கு தீர்வு எட்டப்படும் என்று தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>