மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு கூடு அகழ்வு பணிகள் இன்று 32ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஓரளவிற்கு முடிவடைகின்ற நிலையை எட்டியுள்ளது. தற்போது வரை 23 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், பகுதி அளவாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தற்போது அகழ்வில் இருந்து மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.