“தனித் தமிழ் ஈழமே தீர்வு”: வட்டுக்கோட்டை பிரகடனம் உறுதி எடுத்துக் கொள்வோமாக!

“தனித் தமிழ் ஈழமே தீர்வு”: வட்டுக்கோட்டை பிரகடனம் உறுதி எடுத்துக் கொள்வோமாக!

“தனித் தமிழ் ஈழமே தீர்வு”: வட்டுக்கோட்டை பிரகடனம் உறுதி எடுத்துக் கொள்வோமாக!

இலங்கை தமிழர்களின் வரலாற்றில் பல திருப்புமுனைகளையும் போராட்ட களங்களையும் ஏற்படுத்திய வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 41 ஆண்டுகள் (14.05.1976) பூர்த்தியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் 1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அத்தீர்மானத்தின் சாராம்சம் ஆகும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்த தீர்மானத்தை முன்வைத்து 1977 தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது.

தமிழர் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டையில் இந்த பிரகடனம் செய்தனர்.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.

அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும். அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் 1976 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

1978 ஆம் ஆண்டு இலங்கை ஜனாநாயக சோசலிசக் குடியரசு என்ற அரசியல் சட்டத்தை ஜே.ஆர். கொண்டு வந்தார்.

ஈழப் போராட்டத்தில் முக்கிய வரலாற்று விடயமாக நடந்த “தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்” என்ற வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும். (14.05.1976)

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய தமிழர் தாயகத்தின் சுதந்திரத்தையும் இறையாமையையும்; ஒரு தேசிய இனமாக எமது அரசியல் இலக்கை நாமே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை ஈழத்தமிழர்களுக்கு உண்டு என்பதையும், அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டையில் பிரகடனம் செய்தனர்.

இந்தப் பிரகடனம் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈழத்தமிழர்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று மக்கள் ஆணையாக நிறுவப்பட்டது.

இந்த ஆணையை சர்வதேச சமூகத்தின் முன் மீளவும் எடுத்துரைக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஒன்றிணைந்து 2009/2010 புலம்பெயர் தேசத்திலும் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கான மீள்வாக்களிப்பு நடத்தி வரலாற்று பதிவாக தனித் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வு என எண்திசைக்கும் முழக்கமிட்டனர்.

தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வா.

“தனித் தமிழ் ஈழமே தீர்வு” என வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், அதற்கு தேர்தலில் தமிழர்களால் வழங்கப்பட்ட பேராதரவும், அதுவே மக்களின் ஆணையாக கொள்ளப்பட்ட வரலாறும், பொன் எழுத்துக்களால் என்றும் அழியாமல் பொறிக்கப்பட்டவை.

அறவழியில், அமைதி வழியில் போராடிக் களைத்து, கண்ட பலன் ஒன்றுமில்லை. மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள அரசுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பத்தங்கள் கிழித்தெறியப்பட, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் செல்லாக்காசாக கிடப்பில் போடப்பட, இனி ஆண்டவன்தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது ஆற்றாமையின் வெளிப்பாடே இளம் தலைமுறை போராட்ட வழிமுறையை மாற்றக் காரணமாக அமைந்தது.

மக்கள் வழங்கிய ஆணையை புறம் தள்ளி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தந்தை செல்வாவிற்கு பின் வந்த மிதவாத அரசியல் தலைமைகள், சிங்கள அரசுடன் ஒப்பந்த இணக்கப்பாட்டு, சுயநல அரசியலில் சுகம் காண, நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற இளைஞர்களின் இன உணர்வே ஆயுதப் போராட்டமாக வெடித்தது. அறவழியில் போராடிய தமிழினத்தை ஆயுதம் ஏந்த வைக்க சிங்கள பேரினவாத அரசே காரணம் எனலாம்.

30 ஆண்டு கால, ஆயுத வழிமுறையிலான தமிழீழத்திற்கான சுதந்திரப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் உன்னதமான தியாகங்களாலும் ஈடு இணையற்ற ஈகங்களினாலும் செந்நீர் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டது.

எமது தாயக நிலப்பகுதியின் பெரும் பகுதி மீட்கப்பட்டு நிதி, நீதி, நிர்வாகக் கட்டமைப்புகளையும் நிறுவி ஒரு நிழல் அரசினையும் உருவாக்கி விடுதலையின் வாசலில் நின்ற போதே நாம் வீழ்த்தப்பட்டோம்.

தமிழீழம் என்பது வெறும் கனவல்ல அது சாத்தியம் தான் என்பதை தேசியத்தலைவர் கண்முன்னே உருவாக்கிக் காட்டினார் என்பது உண்மை.

2009 ஆண்டு முள்ளிவாய்க்காலில், இலட்சக்கணக்கான எமது உறவுகளை இனவழிப்பு செய்வதன் ஊடாகவே தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு பின்னடைவினை சிங்கள பேரினவாத அரசினால் ஏற்படுத்த முடிந்தது.

அதுவும் சிங்கள அரசு தனித்து நின்று தமிழர்களை வீழ்த்துவதென்பது எப்போதுமே சாதித்திருக்க முடியாத காரியம்! வல்லாதிக்க சக்திகளின் துணையும், சதிகளும், சூழ்ச்சிகளும், காட்டிக் கொடுப்புகளுமே சிங்கள அரசுக்கு பலமாக மாறின.

இப்பொழுது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில், சர்வதேசமயமாகியுள்ள ஈழ விடுதலைப் போராட்டம், சனநாயக வழிமுறை ஊடாக தீவிரம் பெற்றுள்ளது. தனித்தமிழ் ஈழமே தீர்வு என வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக சட்ட மன்றத்திலும் பின்னர் நிறைவேறப்பட்டது.

சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையிலும் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை சிங்கள பேரினவாத அரசு முழுவீச்சோடு முன்னெடுக்கின்றது . ஐ.நா.வில் ஆண்டுதோறும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் பயன் இழந்து கேள்விக் குறியாகவே தெரிகிறது.

கிளர்ந்தெழுந்துள்ள தமிழீழ மக்களின் உணர்வுகளும், தமிழக மாணவர்களின் எழுச்சியும், புலம்பெயர் தேசத்து ஈழத்தமிழர்களின் அடக்க முடியாத விடுதலை உணர்வும் மட்டுமே உலகத் தமிழர்களுக்கு புதிய உத்வேக்தைக் கொடுத்துள்ளது.

தேசத்தின் தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அறப்போரும், பின்னர் தேசியத்தலைவர் அவர்களின் தலைமையில் ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைந்து சர்வதேச மயமாகியுள்ள எமது போராட்டம், இன்று தேசத்தின் புதல்வர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் “தனித் தமிழ் ஈழமே தீர்வு” என வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தளத்தில் உருவாகப்பட்ட நாடுகள் வாரியான மக்கள் அவைகள் தனித் தமிழீழமே தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதை அனுபவத்தின் ஊடாக கற்றதோடு, தொடர்ந்தும் தமிழீழத்தை மீட்டெடுக்க அயராது அர்ப்பணிப்போடு உழைப்போம் என ஈழப் போராட்டத்தில் முக்கிய வரலாற்று விடயமாக நடந்த “தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்” என்ற வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட இந் நாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: