இலங்கையின் உள்நாட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் அங்கு வசிக்கும் தமிழ் வம்சாவளியினருடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
![latest tamil news](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2850477.jpg)
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் இலங்கையில் இறுதிக்கட்ட சண்டையின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பாக 1.20 லட்சம் ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக மனித உரிமைகள் கவுன்சில் கமிஷனர் மைக்கேல் பேச்லெட் அறிக்கை தாக்கல் செய்தார்.இதற்கிடையே அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா., உயர்மட்ட கவுன்சில் கூட்டத்தில் கோத்தபய ராஜபக்சே உரையாற்ற உள்ளார்.
![latest tamil news](https://img.dinamalar.com/data/gallery/gallerye_072540406_2850477.jpg)
அதற்கு முன்னதாக கொழும்பில் உள்ள அவரது அலுவலகம் தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், இலங்கையில் உள்நாட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழர்களுடன் பேச்சு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்ததற்காக கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன் என்றும் ஐ.நா., பொதுச்செயலரிடம் ராஜபக்சே கூறி உள்ளார். அவரது இந்த முடிவினை இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் வரவேற்று உள்ளனர்.
நன்றி : தினமலர்