ஆம் தேசியத்தலைவர் படத்தை நானே ஒட்டினேன் – என்ன செய்ய போகிறீர்கள்- ஜேர்மன் ஈழப்பெண் – ஆடிப் போன சிங்களம் !!

ஆம் தேசியத்தலைவர் படத்தை நானே ஒட்டினேன் - என்ன செய்ய போகிறீர்கள்- ஜேர்மன் ஈழப்பெண் - ஆடிப் போன சிங்களம் !!

ஆம் தேசியத்தலைவர் படத்தை நானே ஒட்டினேன் – என்ன செய்ய போகிறீர்கள்- ஜேர்மன் ஈழப்பெண் – ஆடிப் போன சிங்களம் !!

ஜேர்மனியில் இருந்து யாழ் சென்ற பெண் ஒருவர் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை பஸ் தரிப்பிட கட்டடம் ஒன்றில் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இச்சம்பவம் 11ம் திகதி மாலை இடம்பெற்ற நிலையில் 12ம் திகதி அவரை சுண்ணாகம் பொலிசார் கைது செய்தார்கள். அருகில் இருந்த ஆஞ்சநேயர் கோவிலில் இருந்த CCTV கமராவில் இது தெளிவாக பதிவாகியுள்ளது. ஆனால் அவரிடம் பொலிசார் நீங்கள் தான் ஒட்டினீர்களா என்று கேட்டவேளை.

ஆம் நான் தான் செய்தேன் என்ன பிழை இருக்கிறது ? அவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். எமது இனத்தின் விடுதலைக்காக போராடியவர். அவர் படத்தை ஒட்டுவதில் என்ன பிழை என்று பொலிசாரை திருப்பிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆடிப் போன சிங்களப் பொலிசார் மறுவார்த்தை பேசாது, அவரை கைதுசெய்துள்ளார்கள். இன்றைய தினம் அவரை நீதிமன்றில் நிறுத்தி மேலும் சில நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று பொலிசார் கோரிக்கை விடுக்க உள்ளதாக அறியப்படுகிறது. இருப்பினும் இந்த வழக்கை நீதிபதி இளஞ்செழியன் கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றுள்ளதோடு.

வழக்கை அவர் நீதிமன்றத்திற்கு மாற்றவும் முனைப்பு காட்டியுள்ளார்கள் தமிழ் ஆர்வலர்கள். 40 வயதுடைய அந்த ஜேர்மன் பெண் ஜேர்மன் நாட்டு குடியுரிமை பெற்றவர் என்றால், இதனை ஜேர்மன் தூதுவருக்கு அறிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை யாழ் தமிழ் ஆர்வலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரு காலத்தில் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை கேட்டு அயர்லாந்து மக்கள் போராடிய வேளை. ஐ.ஆர்.ஏ அமைப்பு உருவாகி பெரும் யுத்தம் வெடித்தது. பிரித்தானிய மண்ணில் பல இடங்களில் அவர்கள் குண்டுகளை வெடிக்கவைத்தார்கள். பிரித்தானிய அரசு அவர்களை பயங்கரவாத தடைப் பட்டியலில் போட்டது.

ஆனால் பின்னர் அவர்கள் அரசியல் கட்சியாக மாறியது தடையை அகற்றி உலக நாடுகள் அவர்கள் ஜனநாயக ரீதிக்கு திரும்ப வழிவிட்டது. ஆனால் இன்று வரை உலக நாடுகள் புலிகளை பயங்கரவாத பட்டியலில் போட்டு, தமிழர்களையும், அந்த இயக்க உறுப்பினர்களையும் மேற்கொண்டு எதனையும் செய்ய விடாது தடுத்து வருகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: