“அம்பாறையில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு பேரணியும், போராட்டமும்”!

"அம்பாறையில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு பேரணியும், போராட்டமும்"!

“அம்பாறையில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு பேரணியும், போராட்டமும்”!

அம்பாறை, திருக்கோவில் பகுதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தின கவனயீர்ப்புப் பேரணியும், போராட்டமும் நடத்தப்பட்டுள்ளன. இந்த போராட்டம் காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இதன்போது திருக்கோவில் தபாலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி மணிக்கூட்டுக் கோபுரத்தை சென்றடைந்த நிலையில் அங்கு வைத்து எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்க தலைவிகள், உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் உறவுகளின் உண்மை நிலை தெரியும் வரை சர்வதேசமே, சர்வதேச நாடுகளே எம்மை கண் திறந்து பாருங்கள், இலங்கை அரசாங்கத்தின் மூலமாக எமக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை சர்வதேசமே எமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் போன்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: