இனவாதம் மலிந்த நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க போவதில்லை என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு செய்தி!
“போர்க்குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கவோ, அல்லது சர்வதேச தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளவோ எமது அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை!” என உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபகஷ தெரிவித்தார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
பாராளுமன்றத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வினவிய கேள்வி களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
“இராணுவ தண்டிப்புக்கு கதவுகளை திறந்துவிட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இன்று எம்மை குறைக்கூறுவது வேடிக்கையானது.எமது ஆட்சியில் ஒருபோதும் இராணுவ காட்டிக்கொடுப்பு இடம்பெற்றவில்லை.
நான் நீதி அமைச்சராக இருந்த போது ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் ஜேர்மனிய இராஜதந்திரிகள், பிரதிநிதிகள் என்னை சந்தித்து கலப்பு நீதிமன்றம் அமைக்க கேட்டதுடன் , இராணுவத்தை விசாரிக்கும் நீதிமன்ற பொறிமுறை ஒன்றினை எவ்வாறு உருவாக்கப்போகின்றீர்கள், எப்போது, எந்த அடிப்படையில் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன என்றும் கேள்விகளை கேட்டனர்.
எனினும் நாம் இராணுவத்தை ஒருபோதும் தண்டிக்கப் போவதில்லை. காட்டிக்கொடுக்க போவதில்லை. இராணுவத்தை கையாளும் விதத்தில் தெரேசா மே என்ன யுக்திகளை கையாண்டாரோ அதே கொள்கையை தான் நாமும் பின்பற்றப்போகின்றோம் என்பதை உறுதியாக தெரிவித்தேன். யுத்த குற்றம் என்ற குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இராணுவத்தை தண்டிக்க போவதாக கூறும் நபர்கள் கடந்த காலத்தில் இராணுவத்தை தண்டிக்க கதவுகளை திறந்தனர் என்பதை மறந்துவிடக் கூடாது. யுத்தம் முடிவுக்கு வந்து 48 மணித்தியாலம் கடக்க முன்னர் ஐக்கிய நாடுகள் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நிலைமைகளை கூறினீர்கள்.
அதன் பின்னரே நாட்டில் தருஸ்மான் குழு செயற்பட ஆரம்பித்தது. அதன் பின்னரே இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. சர்வதேச விசாரணை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையும் அதன் பின்னரே எழுந்தது.
இதற்கு முன்னர் இலங்கையில் சர்வதேச தலையீடுகள் ஏற்படும் நோக்கில் ரோம் உடன்படிக்கை செய்துகொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்ட போது அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க உடன்படிக்கையில் பாராதூரமான தன்மைகளை கவனத்தில் கொண்டு உடன்படிக்கையை கைச்சாதிடாது நிராகரித்தார்.
எனினும் அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தான் பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அதன் பின்னரே சர்வதேச எம்மை நெருக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தது.
எவ்வாறு இருப்பினும் எமது ஆட்சியில் எமது இராணுவத்தின் மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்து சர்வதேசம் எம்மை ஏற்றுகொள்ளும் நகர்வுகளை முன்னெடுத்துள்ளோம். இனியும் நாம் எமது இராணுவத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். அதில் எந்த சந்தேகமும் எழப்போவதில்லை. எனினும் முன்னைய ஆட்சியாளர்கள் எம்மை விமர்சிப்பது வேடிக்கையானதாக அமைந்துள்ளது.” என கூறினார்.
மொத்தத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை சுட்டி காட்டி வெளியாக விசாரணை ஒன்றுக்கு வலியுறுத்துவோம்!
அநீதியாளரோடு போராடி கொண்டே நீதி வேண்டும் தமிழ் மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன!