அன்மையில் வட மாகாண சபையில் மகளிர் நலத் துறை அமைச்சராக பதிவேற்றுள்ள திருமதி.ஆனந்தி சசிதரன் அவர்களுக்கு எமது உலகத் தமிழர் பேரவை – யின் சார்பில் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம்.
நமது வாழ்த்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, 2009-ல் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது அவரது கணவரும், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியுமான திரு. எழிலனின் சரணடைதல் எவ்வாறு நடந்தேறியது என்ற வரலாற்று குறிப்பினை அவரது நன்றி கடிதத்தினுடாக கீழ்கண்ட படி பகிர்ந்துள்ளார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
“தலைவர்
உலகத்தமிழர் பேரவை
அன்புடையீர்
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி.
முள்ளிவாய்க்கால் போரில் வெள்ளைக்கொடி சம்பவம் என்பது நடேசண்ணை, புலித்தேவன் போன்றோர் இணைத்தலைமை நாடுகளின் பின்னணியில் சரணடைந்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.
ஆனால் எழிலனுடன் சரணடைந்தவர்கள் பிரான்சிஸ் ஜோசப் பாதர் அவர்களுடன் போர்க்கைதிகளாக 45000 மக்கள் முன் இராணுவத்திடம் சரண்டைந்தவர்கள். எனவே இவை இரண்டும் வேறு வேறு சம்பவங்கள் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்
ச. அனந்தி”
மேற்குறிப்பிட்டுள்ள வரலாற்றுச் செய்தியினை நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம்.
உலகத் தமிழர் பேரவை 2009 இறுதி கட்ட போர் நிகழ்ச்சி குறித்து பல்வேறு கோரிக்கையை இருப்பினும், அவற்றில் முக்கிய கோரிக்கையாக போரில் சரணடைந்த அனைத்த தமிழ் போராளிகளையும் இனியும் தாமதிக்காமல், உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என்ற உறுதியனை கொண்டுள்ளது என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
அக்னி
ஒருங்கிணைப்பாளர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com