இலங்கையின் முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிகிறது!

இலங்கையின் முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிகிறது!

இலங்கையின் முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிகிறது!

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 26 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் (24-10-2018) முடிவுக்கு வருகின்றது.

இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வடக்கு மாகாணசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

தமிழ் மக்களின் தனித்துவத்தில் பற்றுள்ளவர்கள் அனைவரும் கொள்கைகளின் அடிப்படையில் ஓரணியில் திரண்டு பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்களின் உதவியுடனும் நாம் எமது செயற்பாடுகளை நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல், பொருளாதார நடவடிக்கைகளினூடாக முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்த விக்னேஸ்வரன்.

போர் குற்ற விசாரணை மற்றும் உண்மையை கண்டறியும் பொறிமுறைகளை ஏற்படுத்த நாம் முயன்று அவற்றுக்கூடாக, தொடர்ந்தும் இருளில் வைக்கப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு உண்மைகளை புரியவைத்து எமக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>