தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இரங்கல் அஞ்சலி செலுத்தப்பட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டது.
வட மாகாண சபையின் 67வது அமர்வு இன்றைய தினம் பேரவைத்தலைவர் சீ.வி.பல.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. அப்பொழுது சபை ஆரம்பத்தில் பேரவைத்தலைவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்காக அனைவரும் எழுந்து நின்று இரு நிமிட மௌன அஞ்சலியை செலுத்துவதாக அறிவித்தல் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இரங்கல் உரையை ஆற்றினார். இதனை அடுத்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.