உணர்வெழுச்சியுடன் யாழ். பல்கலையில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

உணர்வெழுச்சியுடன் யாழ். பல்கலையில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

உணர்வெழுச்சியுடன் யாழ். பல்கலையில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், யாழ். பல்கலைக் கழகத்திலும் தற்போது நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ். பல்கலையின் துணைவேந்தர் விக்னேஸ்வரன் நினைவுச்சுடரை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் சுடரேற்றி, மலர் தூவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 9ஆம் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் யாழ். பல்கலை மாணவர்களும் பொதுமக்களும் சூழ வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தற்போது இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>