மன்னார் புதைகுழி நாம் எல்லாம் எதிர்பார்த்ததற்கு மாறாக எம் இனத்தின் வரலாற்று பொக்கிசமாக மாறவும், வெளிவரவுள்ள அறிக்கையின் தொன்மை மன்னர் காலம் வரை செல்லவும் கூடும்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
நாம் நினைப்பதுபோல் வெளிவரவுள்ள மன்னார் புதை குழிவிடயத்தின் கார்பன் அறிக்கையினை வைத்து அரசியல் ரீதியாக எதுவும் செய்ய முடியாது அதன் முடிவை அரசியல் ரீதியாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மாற்றுப்பாதையில் செல்லவும். வரலாற்று ஆய்வாளர்கள் மாத்திரம் வரிசையில் தயாராக வைக்கவும்.
இதை தவிர்த்து வடக்கு கிழக்கில் இன்னும் தோண்டப்படாதிருக்கும் புதைகுழிகள் தொடர்பாக கவனத்தில் எடுத்து அவற்றையும் தோண்ட வைத்து கார்பன் அறிக்கையினை விரைவாக பெற்று அதற்கு தீர்வுகளை பெற முயற்சிபோம். அதில் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும்.
மன்னார் புதைகுழி கார்பன் அறிக்கை நாம் எதிர்பார்த்த அளவில் நடைமுறை அரசியலோடு தொடர்புபட்ட திருப்பங்களோடு இருக்கும் வாய்ப்பு குறைவு. அது வரலாற்றோடு தொடர்புபட்டதாகவே இருக்கலாம். அது எமக்கு எம் முப்பாட்டன் வரலாற்றை பற்றி அறிய உதவலாம். வரலாற்று ஆய்வாளர்கள் அறிக்கை வெளிவந்தவுடன் புத்தகங்கள் எழுதலாம். அதற்கு இப்போதே தயாராகவும்.
பண்டாரவன்னியன் பரம்பரையின் வரலாறும் இதனூடாக மீள எழுதப்படலாம். இதுவோர் வரலாற்று பொக்கிசமாகவும் இருக்கக்கூடும். மண்ணின் மைந்தர்கள் யாரென்ற கேள்விக்கு இனி மரபணு மூலம் விடையும் அறியலாம். கார்பன் அறிக்கை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருங்கள். ஆச்சர்யம் உண்டாகலாம்.
அகழ்வுப்பணிகளையும் ஆய்வுப்பணிகளையும் தொடர்ந்து செய்வதா வேண்டாமா என்பதை அரசை மட்டும் நம்பி இருக்காமல், தமிழர் தரப்பு முடிவெடுத்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.