தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் – சீ.வி.கே.சிவஞானம்!

தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் - சீ.வி.கே.சிவஞானம்!

தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் – சீ.வி.கே.சிவஞானம்!

பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரோஸ் பட்டியலில் ஒரு குழுவை உருவாக்கி அவருடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார்.

அந்த குழுவில் நானும் இருந்தேன் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் “ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ஒப்பந்தமும்” என்ற நூல் அறிமுக விழா யாழ். முகாமையாளர் சங்கத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், “நாம் தொடர்ந்தும் அடிப்பட முடியாது. நாம் ஜனநாயக அரசியலில் ஒரு பகுதியையும் செய்ய வேண்டும். அதில் நாம் சம்பந்தப்பட வேண்டும். அதற்கு ஒரு முடிவு வேண்டும். என்னுடைய காலத்திலேயே இதை முடிக்க வேண்டும். இதை பிரபாகரனே என்னிடம் கூறினார்.

ஜனநாயக அரசியல் சிந்தனை பிரபாகரனிடம் இருந்தது. இதனால் தான் தோளில் துண்டு போடுவதைப் போன்று போடுவேன் என இந்தியாவிலே பிரபாகரன் கூறினார். தோளில் துண்டு போடுவதற்கு ஏராளமான அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால் அவ்வாறானவர் இல்லை பிரபாகரன். தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன். வீரம் செறிந்த அரசியல்வாதியாக தோளிலே துண்டு போடுவேன் என்றுதான் கூறினார்” என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>