“விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு”!

"விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு"!

“விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு”!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக வளவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட வித்தியாசமான குண்டுகள் மீட்கப்பட்டன.

இவை விடுதலைப் புலிகள் தயாரித்த குண்டுகளில் ஒன்றென காவல் துறையின் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தயாரிப்பான தமிழன் குண்டு என்ற கைக் குண்டுக்கு இணையான இரண்டு வெடிகுண்டுகள் கண்டாவளை பிரதேச செயலக வளவில் புதைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து, காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குண்டுகளை மீட்டு விசேட அதிரடிப்படையினர் அவற்றை செயலிழக்க செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் நோக்கில் இவ்வாறான பொறி வெடிகளை புதைத்து வைத்துள்ளதாக அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>