யாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு!

யாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு!

யாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக இமானுவேல்ட் ஆனோல்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மாநகர ஆணையாளர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபை பிரதி மேயராக துரை ராஜா ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஈபிடிபி கட்சி சார்பில் போட்டியாளராக களமிறக்கப்பட்ட றெமீடியஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்க கூட்டமைப்பு சார்பு ஆர்னோல்ட் முதல்வராக தெரிவாகியுள்ளார்.

முன்னதாக யாழ்.மாநகரசபையின் முதல்வர் தெரிவிற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் கூட்டமைப்பு 18 வாக்குகளையும்,முன்னணி 13 மற்றும் ஈபிடிபி 13 வாக்குகளையும் பெற்றிருந்தன.

இந்நிலையில் சமமான வாக்குகளை பெற்றிருந்த ஈபிடிபி சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி றெமீடியஸ் மற்றும் முன்னணி வேட்பாளர் மணிவண்ணன் பெயர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட போது றெமீடியஸ் தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் பின்னராக ஈபிடிபி சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி றெமீடியஸ் மற்றும் கூட்டமைப்பின் ஆனோல்ட் இடையே வாக்கெடுப்பு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் முன்னணி இவ்வாக்கெடுப்பில் எவருக்கும் ஆதரவளிக்காது நடுநிலை வகிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ஈபிடிபி சார்பில் போட்டியிட இருந்த சட்டத்தரணி றெமீடியஸ் பின்வாங்கியதையடுத்து ஆனோல்ட் முதல்வராகியுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>