பெண் பிரதிநிதித்துவ தேர்தல் நேற்று செயலகத்தினால் வெளியிடப்பட்டது!

பெண் பிரதிநிதித்துவ நேற்று தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்டது!

பெண் பிரதிநிதித்துவ நேற்று தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்டது!

யாழ்மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சிகள் பெற்ற விகிதாசார ஆசனங்களின் அடிப்படையில் நியமிக்க வேண்டிய பெண் பிரதிநிதித்துவ நேற்று தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்டது.

காரைநகர் பிரதேச சபைக்கு UNP, EPDP தலா ஒரு பெண் உறுப்பினரை நியமிக்க வேண்டும்.

இதன் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் 17 சபைகளில் கட்சிகள் நியமிக்க வேண்டிய பெண் உறுப்பினர்கள் அக்கட்சிகள் பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகர சபையில் மொத்தம் 45 உறுப்பினர்கள் உள்ள நிலையில் சபையில் மொத்தமாக 11 பெண்கள் அங்கம் வகிக்க வேண்டிய நிலையில் மூன்று பெண்கள் வெற்றியீட்டியுள்ளனர். ஏனைய 8 பெண்களையும் ஈ.பீ.டீ.பி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்பன தலா 3 உறுப்பினர்களும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன தலா ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் நியமிக்க வேண்டும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இதேபோன்று வலி வடக்கு பிரதேச சபைக்கு ஈ.பீ.டி.பி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன தலா 2 பெண் உறுப்பினர்கள் வீதம் ஆறு பெண் உறுப்பினர்களும் , நல்லூர்ப் பிரதேச சபைக்கு அ.இ.த.காங்கிரஸ் 3 , ஈ.பீ.டீ.பி ஒரு உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச சபைக்கு அ.இ.த.காங்கிரஸ் , ஈ.பீ.டீ.பி , சுதந்திரக் கட்சி என்பன தலா ஒரு பெண்களும் நியமிக்க வேண்டும். அதேவேளை பருத்தித்துறை பிரதேச சபைக்கு அ.இ.த.காங்கிரஸ் மற்றும் ஈ.பீ.டீ.பி என்பன தலா இரண்டு உறுப்பினர்கள் விகிதம் நியமிக்க வேண்டும்.

இதேநேரம் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபைக்கு தமிழ் அரசுக் கட்சி , ஈ.பீ.டீ.பி என்பன தலா ஒரு உறுப்பினரும் அ.இ.த.காங்கிரஸ் இரு உறுப்பினர்களும் , வலி. கிழக்கு பிரதேச சபைக்கு அ.இ.த.காங்கிரஸ் , ஈ.பீ.டீ.பி , சுயேட்சைக் குழு ஆகிய மூன்றும் தலா இரண்டு பெண்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி , சுதந்திரக் கட்சி ஆகியன தலா ஒரு பெண் உறுப்பினரும் நியமிக்க வேண்டும். வலி. தெற்கு பிரதேச சபையில் அ.இ.த.காங்கிரஸ் , ஈ.பீ.டீ.பி , சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் தலா ஒரு பெண்கள் விகிதம் நியமிக்க வேண்டும்.

இந்த வகையில் வலி.தென் மேற்கு சபையில் அ.இ.த.காங்கிரஸ் 04 , ஈ.பீ.டீ.பி 02 , ஐ.தே.கட்சி ஒன்றும் , வலி. மேற்கு சபையில் அ.இ.த.காங்கிரஸ் 03 , ஈ.பீ.டீ.பி 02 , ஐ.தே.கட்சி ஒன்றுமாக நியமிக்கப்பட்ட வேண்டும் என்பதோடு நெடுந்தீவுப் பிரதேச சபையில் தமிழ் அரசுக் கட்சியே இரு பெண்களையும் நியமிக்க வேண்டும். ஊர்காவற்றுறைப் பிரதேச சபையில் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஈ.பீ.டீ.பி என்பன தலா ஒரு பெண்களும் காரைநகரில் ஈ.பீ.டீ.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒரு பெண்கள் என்ற விகிதாசாரத்தில் நியமிக்கப்பட்ட வேண்டும்.

சாவகச்சேரி நகர சபையில் தமிழ் அரசுக் கட்சி , ஈ.பீ.டீ.பி என்பன தலா இரு பெண்களும் , பருத்தித்துறை நகர சபையில் தமிழ் அரசுக் கட்சி 02 , ஈ.பீ.டீ.பி ஒன்றும் நியமிப்பதோடு வல்வெட்டித்துறையில் சுயேட்சைக் குழு ஒரு பெண் பிரதிநிதித்துவத்தினை நியமிக்க வேண்டும் . இவ்வாறே வேலணைப் பிரதேச சபையில் மட்டும் முழுமையான பெண் பிரதிநிதிகளை உறுதி செய்ய முடியாத நிலையில் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஈ.பீ.டீ.பி என்பன தலா ஓர் பெண் உறுப்பினரை நியமிக்க வேண்டும். எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>