இந்தியாவின் ஐதராபாத் நகரில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெற்றது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இப்போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று இலங்கை திருநாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார் யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவியான ஸ்ரீபாலகிருஷ்ணன் வனோஜா.
இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 மாணவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் ஒரே ஒரு தமிழ் மொழி மூல மாணவியாக இவர் கலந்துகொண்டிருந்தார்.
கணிதபாட ஒலிம்பியாட் பிரிவு – 2 இற்காக இடம்பெற்ற போட்டியிலேயே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.