அகில இலங்கை ரீதியில் கல்முனை வலயம் தமிழ் மொழி மூலமான பிரிவில் முதலாம் இடம் பிடித்திருக்கின்றது என்றால் அதற்கு முழுமையான பங்களிப்பு செய்தது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியே.
இவ்வாறு கல்முனை கல்வி வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்துள்ளார்.
கல்முனை கார்மேல் பற்றிமாக கல்லூரி தேசிய பாடசாலையில் 2017-ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அதிக மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ தரச்சித்தி பெற்றிருந்தனர். இந்நிலையில், குறித்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது நேற்று (09.06.2018) சனிக்கிழமை கல்லூரி முதல்வர் எஸ்.சந்தியாகு தலைமையில் சிசிலியா மேரி அரங்கில் நடைபெற்றது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
இந்நிகழ்வில் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் தயாகமகேயின் பிரத்தியேக செயலாளர் சந்தலால் அதிகெட்டி, கல்முனை கல்வி வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்னதர். கல்முனை வலயத்தின் பெயர் இலங்கை முழுவதும் பரவுவதற்கு முழு பொறுப்பையும் பெற்றிருக்கும் கல்லூரியாக கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி திகழ்கின்றது. கல்முனை வலயத்தில் 103 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுக்கொண்ட போது அதிகமான மாணவர்கள் (26 மாணவர்கள்) 9 ஏ சிதிதிகளை பெற்று உள்ளனர் என்றால் அது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவர்களேயாகும்.