வடமாகாண அமைச்சர்களின் ஊழல் எதிரொலி! தட்டிக் கேட்ட முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

வடமாகாண அமைச்சர்களின் ஊழல் எதிரொலி! தட்டிக் கேட்ட முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

வடமாகாண அமைச்சர்களின் ஊழல் எதிரொலி! தட்டிக் கேட்ட முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும் என்ற கூற்று உண்மையாகியுள்ளது. இலங்கை அரசியல் களத்தில் சூடுப்பிடிக்கும் விடயங்கள் எப்போதும் சிறப்பாக இடம் பெறும்.

அதற்கு தற்போது சிறந்த எடுத்துகாட்டாக வடக்கு மாகாண சபை விவகாரம் காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களாகவே அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் அமைச்சர்கள் மீதான விசாரணை, அது தொடர்பான அறிக்கை மற்றும் விவாதம் என்பனதான்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, கடத்தப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் என்று எத்தனையோ விடயங்கள் மக்களுக்காக பேசவும், செய்யவும் உண்டு.

அதனை எல்லாம் புறம் தள்ளி விட்டு அமைச்சர்களின் ஊழல் விவகாரம் தொடர்பாக பேச வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அந்த அளவு அரசியல் தலைமையால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதுதான் உண்மை.

இன்றைய தினம் வட மாகாண அமைச்சர்கள் தொடர்பான விவாதம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோர் தாமாகவே பதவி விலகுமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான ஊழல், நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்திருந்தார். அதன்படி அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு விசாரணை செய்யப்பட்ட முறைப்பாடுகளில் ஊழல், நிதி மோசடி, நிர்வாக ரீதியிலான முரண்பாடுகள், நியமனம் சார்பான பதவி விடயங்களும் உள்ளடக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தது. இவ்விசாரணைகள் முடிவுற்றமையை தொடர்ந்து கடந்த மாதம் குறித்த விசாரணை குழுவின் இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தொடர்பான விபரங்கள் 4 அமைச்சர்களுக்கும் முதலமைச்சரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டுக்களில் அதிகமானவை நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி அமைச்சருக்கு எதிரான நிர்வாக ரீதியான குற்றச்சாட்டுக்கள் பலவும் நிருபிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குழு தனது அறிக்கையில், வடக்கு மாகாண அமைச்சர்களான ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா இருவரும் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அத்துடன் சுகாதார அமைச்சர் மற்றும் மீன்பிடி அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பகுதியளவில் நிரூபிக்கப்படவில்லை எனவும் நிதி மோசடிகள், நியமனங்கள், இடமாற்றங்கள் தொடர்பாக தேவையற்ற தலையீடுகள், வினைத்திறன் அற்ற செயற்பாடுகள் போன்ற குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் வடமாகாண சபை வினைத் திறனாக இயங்க வேண்டும் எனில் அதிகளவில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் இருவர் பதவி விலக வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது.

எனினும் அது குறித்த விவாதங்கள் இன்றைய தினம் எடுத்து கொள்ளப்பட்ட பின்னர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சரின் தீர்மானத்தின் பின்னர் வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு எதிர்வரும் 22 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்போது வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் இருவர் மீதும் விசாரணைகள் நடத்தப்படும்.

அதுவரை விடுமுறையில் செல்ல வேண்டும், இவர்கள் தங்கள் அமைச்சு பொறுப்புக்களில் இருந்து விலகி ஓய்வில் இருக்க வேண்டும், அவர்களின் அமைச்சு பொறுப்புக்களை நான் பார்த்துக் கொள்வேன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குற்ற செயலில் ஈடுப்பட்ட அமைச்சர்கள் தொடர்பாக தற்போது முதலமைச்சர் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது.

வடமாகாண சபையில் அமைச்சர்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்பட்டபோது அது தமிழ் மக்களின் மனங்களை பெரிதும் பாதித்திருந்தது. தற்போது குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் எடுத்திருக்கும் முடிவானது ஏனைய மாகாணசபைகள் உட்பட முழு நாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள வடமாகாண அமைச்சர்களை பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் கோரியுள்ள நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: