‘தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்’ – சீ.யோகேஸ்வரன்!

‘தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்’ - சீ.யோகேஸ்வரன்!

‘தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்’ – சீ.யோகேஸ்வரன்!

இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதெனவும் பிரிந்து செயற்படுதல் என்பது, தமிழ் மக்களுக்கான தீர்வுப் பாதையில் மிகவும் பாதிப்பான நிலையை ஏற்படுத்துமெனவும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு, பார் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,

“தமிழ் மக்களுக்குள் ஏற்படும் பிளவுகளைப் பெரும்பான்மையினக் கட்சிகள் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. அது, துன்பங்களுடன் நொந்துபோயுள்ள தமிழ் மக்களை, மீண்டும் துன்பத்துக்குத் தள்ளிவிடும்.

“தமிழ் மக்கள் பேரவை பிளவுபட்டு நிற்காமல், அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் ஒன்றாக இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றேன்.

“ஈ.பி.ஆர்.எல்.எப். விலகுவதால் எந்தப் பாதிப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படப்போவதில்லை. எனினும், சுரேஸ் பிரேமச்சந்திரன், தொடர்ந்தும் த.தே.கூவுடன் இணைந்து பயணிக்கவேண்டும்” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: