ஆனந்தி சசிதரன் சுதந்திரக் கட்சியில் இணையவில்லை என மறுப்பு!

ஆனந்தி சசிதரன் சுதந்திரக் கட்சியில் இணையவில்லை என மறுப்பு!

விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவி, தனது கணவரை 2009-ல் வெள்ளைக் கொடியோடு அனுப்பி வைத்து, இதுவரை கணவர் என்ன ஆனார் என தெரியாமல் போராடி வருகிறார். ஆனந்தி சசிதரன், சென்ற முறை வட – மாகாண அமைச்சராக இருந்தும், அவர் போராட்டத்திற்கு தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை.

இவ்வளவு வேதனைக்கு மத்தியில், இப்பொழுது, அவர் சந்திரிகாவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து விட்டார் என வெளிநாட்டில் உள்ள சில தமிழ் ஊடகங்களே தவறான செய்தியினை அவரைப் பற்றி பரப்பி வருகிறது. இதை உறுதி செய்ய உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் அக்னி சுப்ரமணியம், ஆனந்தி சசிதரனோடு தொலைப்பேசியில் பேசினார்.

இந்த செய்தி முற்றிலும் தவறான செய்தி. நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவில்லை என மறுத்தார்.

மறுப்பறிக்கை :

23.08.2019
ஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி தொடர்பானது

மலையக மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களுடனான நேற்றைய சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு என்னால் வழங்கப்பட்ட கருத்துக்களை திரிவு படுத்தி சில இணையத்தளங்களும் , பத்திரிகை நிறுவனங்களும் செய்தி வெளியிட்டுள்ளமை மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

மலையக மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணரும் முகமாகவும் அவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக அவர்களுடன் இணைந்து பயணிப்போம் என்று நான் குறிப்பிட்டதோடுமக்கள் முன்னேற்ற கழகத்தில் பல மலையகத்தில் உள்ள கட்சிகளில் இருந்து வெளியேறியவர்களும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதை அதன் தலைவர் திரு.குமார் தெரிவித்தார்.

இந்த செய்தியை திரிபு படுத்தி , நான் மைத்தரியின் தமிழ்பிரிவு கட்சியுடன் இணைந்தாக அரசபுலனாய்வு பின்னணி கொண்டோர் அவர்களின் சம்பளத்தை பெற்றுக் கொள்பவர்கள் தங்களுக்கு ஏற்ற இணையத்தளங்களில் உலாவ விட்டுள்ளனர் .

நான் வேட்பாளராக அறிமுகமாகிய காலம் தொடக்கம் அரசுடன் இணைந்தேன் இணைகிறேன் என்றெல்லாம் எழுதிய வண்ணமே உள்ளனர் . ஊடக சந்திப்பின் மிக தெளவாக ஊடகவியலளர்களுடன் பேசிய பின்னரும் இவ்வாறான திரிபுபடுத்திய செய்தியை பதிவில்லாத இணையதளங்களூடாக பரவவிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகளாக இருந்து ஊடகவியலாளர்களாக தொழிற்படுபவர்களும் எனது அரசியலில் சேறு பூச முனைவது வருத்தமளிக்கின்றது.. இலங்கை தேசியத்திற்கு நானும் என் சார்ந்த கட்சியும் என்றுமே அடிபணியாது.

வாழ்த்துவோர் வாழ்த்தட்டும். தூற்றுவோர் தூற்றட்டும் . என் கடமையை நான் செவ்வனே நிறைவேற்றுவேன். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் ஒழுக்க நெறியின் பால் நின்று எனது கருத்துச் சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கோரிநிற்கின்றேன்.

ஆகவே நான் சொல்லாத, செய்யாத விடயமொன்றுக்கு முக்கியத்துவம் அளித்து பிரசுரித்த ஊடகங்கள் எனது உண்மையான நிலைப்பாட்டினை இத்தாள் வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்கான முக்கியத்துவத்தினையும் ஊடக ஒழுக்கத்தின் பால் நின்று வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அனந்தி சசிதரன்,

செயலாளர் நாயகம்

ஈழத்தமிழர் சுயாட்சி கழகம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>